இந்த படத்தில் ஒளிந்திருக்கும் 6 விலங்குகளை 6 நொடிகளில் கண்டுபிடிங்க! என்ன சவாலுக்கு ரெடியா பாஸ்?
டெல்லி: இந்த படத்தில் மறைந்திருக்கும் 6 விலங்குகளை 6 நொடிகளில் கண்டுபிடித்துவிடுங்கள் பார்ப்போம். சவாலுக்கு நீங்க ரெடியா?
ஆப்டிக்கல் இல்லூஷன் எனப்படும் ஒளியியல் மாயை என்பது சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. இவை வருவதற்கு முன்னர் கணக்கு தொடர்பான கேள்விகளை முன் வைத்து நெட்டிசன்கள் விளையாடி வந்தனர்.
ஆனால் தற்போது ஆப்டிக்கல் இல்லூஷன், பர்சனாலிட்டி டெஸ்ட் ஆகியவற்றை வைத்து விளையாடி வருகிறார்கள். பாவம் நிறைய பேரின் மூளையுடன் விளையாடுகிறார்கள். இந்த கேள்விகளால் பலர் மண்டையை போட்டு உடைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
படத்தில் என்ன தெரிகிறது..! ஒருவர் பனிமலை மீது ஏறுகிறார்ன்னு நினைச்சா தப்பு! உண்மை என்ன தெரியுமா?

கண்ணுக்கும் மூளைக்கும்
இது கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தரும் ஆப்டிக்கல் இல்லூஷன் படங்கள் உங்கள் ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு விளையாட்டாக கலக்கி வருகிறது. இந்த ஆப்டிக்கல் இல்லூஷன் படங்கள் மிகவும் வித்தியாசமானது. இந்த படத்தில் 6 விலங்குகள் மறைந்திருக்கின்றன.

6 வினாடிகள்
அவற்றை 6 வினாடிகளில் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் உலக சாதனையாளர்தான். டிரை செய்யுங்கள். இந்த படம் இந்த மாத தொடக்கத்தில் பாவினி ஆன்லைன் என்ற தளத்தில் முதல்முதலில் வெளியிடப்பட்டது. இதில் 6 விலங்குகள் மறைந்திருக்கின்றன. அந்த 6 விலங்குகளையும் கண்டுபிடிக்க முடியுமா என பாருங்கள்.

17 சதவீதம்
இந்த படம் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் உள்ள 6 விலங்குகளையும் 17 சதவீதம் பேர் மட்டுமே இதுவரை கண்டுபிடித்துள்ளார்கள். நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா என பாருங்கள். ஒரு நல்ல இயற்கை காட்சி போல் வரையப்பட்டுள்ள இந்த ஆப்டிக்கல் இல்லூஷன் படத்தில் மலைகள், புல்வெளிகள், மரங்கள் மற்றும் புதர்கள் இருக்கின்றன.

கூர்ந்து கவனித்தல்
இங்கு கூர்ந்து கவனித்தால் இந்த படத்தில் ஆறு உயிரினங்கள் மறைந்திருப்பது தெளிவாகிறது. இந்த ஆப்டிக்கல் இல்லூஷன் படத்தில் உள்ள 6 விலங்குகளை 6 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியாவிட்டால் கவலையை விடுங்கள். நாங்கள் விடையை சொல்கிறோம். அப்போது ச்சே மிஸ் பண்ணிட்டோமேனு நினைப்பீர்கள்.

6 விலங்குகள் இதோ
மலைகளில் மறைந்திருக்கும் சாம்பல் நிறத்தினாலான ஒட்டகம், மரத்தின் செதில்களில் காணப்படும் முதலை, வலது புறம் மரம் மற்றும் புற்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் மான், புல்லில் ஒரு பாம்பு, பூக்கள் வடிவத்தில் பட்டாம்பூச்சி, மரத்தின் இலைகளில் ஒரு முயல் என 6 விலங்குகள் கிடைத்துவிட்டன. சிம்பிள் அன்ட் ஈஸி!