டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அம்பானி முதல் சிபிஐ வரை.. 24 மணி நேரத்தில் நிகழ்ந்த 6 பரபரப்பு மாற்றங்கள்.. என்ன நடக்கிறது?

தேசிய அளவில் நேற்று 6 முக்கியமான விஷங்களில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok sabha elections 2019 | அம்பானி முதல் சிபிஐ வரை ! 6 பரபரப்பு மாற்றங்கள்!

    டெல்லி: தேசிய அளவில் நேற்று 6 முக்கியமான விஷங்களில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் இப்படி மாற்றம் ஏற்பட்டு இருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

    லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது. கடந்த ஒரு மாதமாக நடந்த தேர்தல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

    தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் பரபரப்பு அடுக்கும் முன் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தேசிய அரசியலில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.

    தனி அறை.. விருந்துக்கு பின் மீட்டிங்.. அமித் ஷா உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய ஓபிஎஸ்.. ஏன்? தனி அறை.. விருந்துக்கு பின் மீட்டிங்.. அமித் ஷா உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய ஓபிஎஸ்.. ஏன்?

    அம்பானி வழக்கு

    அம்பானி வழக்கு

    பொதுவாக கடந்த இரண்டு வருடங்களாக காங்கிரஸ் கட்சியும் ரிலையன்ஸ் குழும தலைவர் ஆனால் அம்பானியும் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றுதான் ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடுத்த அவதூறு வழக்கை அனில் அம்பானி திரும்பப் பெற்றார். 5000 கோடி ரூபாய் கேட்டு அவர் தொடுத்த வழக்கை அவர் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

    வெங்கய்யா நாயுடு என்ன சொன்னார்

    வெங்கய்யா நாயுடு என்ன சொன்னார்

    அதேபோல் திடீர் என்று துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தேசிய பக்தி குறித்து பேசுகிறார். அதாவது, ஜெய் ஹிந்த், பாரத் மாதா கீ ஜெ என்று சொல்வது எல்லாம் தேச பக்தி கிடையாது என்று கூறுகிறார். இது பாஜக கட்சியினர் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

     சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

    சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

    மேலும் நேற்றுதான் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் மீது தொடுத்த வழக்கை சிபிஐ திரும்ப பெற்றுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சிபிஐ புகார்களை திரும்ப பெற்று இருக்கிறது இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பகுஜன் சமாஜ்

    பகுஜன் சமாஜ்

    அதற்கு அடுத்தபடியாக அதே உத்தர பிரதேசத்தில் நேற்று மட்டும் 15 மூத்த அரசு அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை சந்தித்து இருக்கிறார்கள். இன்றும் அவரை சந்திக்க பல அரசு அதிகாரிகள் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கிறார்கள்.

    அசோக் லவசா

    அசோக் லவசா

    மிக முக்கியமாக தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவசா தேர்தல் ஆணைய நடைமுறைகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்குகிறார். வெளியில் தெரியாமல் இருந்த, இந்த விஷயம் தற்போது நாடு முழுக்க பிரச்சனையாக மாறி இருக்கிறது. லவசா வெளிப்படையாக் தேர்தல் ஆணையத்தை எதிர்த்து கடிதம் எழுதி உள்ளார்.

    இந்திய வீரர்கள்

    இந்திய வீரர்கள்

    கடைசி விஷயம்தான் மிக முக்கியமானது என்று கூற வேண்டும். பாகிஸ்தான் நாட்டுடன் நடத்த வான்வெளி சண்டையின் போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் இந்திய வீரர்கள் மூலம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நேற்று இதற்காக இந்திய விமானப்படை அதிகாரி நீக்கப்பட்டுள்ளார். முதலில் மிக் 17 ஹெலிகாப்டர் பாகிஸ்தான் தாக்குதலில் வீழ்த்தப்பட்டது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மிக் 17 ஹெலிகாப்டர் இந்திய விமானப்படை மூலமே வீழ்த்தப்பட்டது உறுதியாகி உள்ளது.

    நல்ல நேரம்

    நல்ல நேரம்

    சரியாக தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இந்திய விமானப்படை இந்த தவறை ஒப்புக்கொண்டு இருக்கிறது. வரிசையாக நேற்று 24 மணி நேரத்தில் இந்த ஆறு விஷயங்களில் மாற்றம் ஏற்பட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தேர்தல் முடிவுகள் மாறுகிறதா, ஆட்சி மாறுகிறதா என்ற கேள்வி இதனால் எழுந்துள்ளது.

    English summary
    6 Major things have seen a real twist in the last 24 hours one day before election results.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X