டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 6 முறை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்தது.. காங். வெளியிட்ட பரபரப்பு தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: மன்மோகன்சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 6 முறை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜிவ் சுக்லா இன்று தெரிவித்தார்.

2008ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி முதல் முறையாக, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதாம். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியிலுள்ள பட்டால் செக்டாரில் இந்த தாக்குதலை இந்திய ராணுவம் முன்னெடுத்தது. 2011ம் ஆண்டு, ஆகஸ்ட் 30ம் தேதி முதல், செப்டம்பர் 1ம் தேதி வரை, கேல் பகுதியிலுள்ள சார்தா செக்டாரில் 2வது முறையாக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடைபெற்றது.

6 surgical strikes were conducted during Manmohan Singh government

2013ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி, சவான் பாட்ரா செக்போஸ்ட் பகுதியில் அடுத்ததாக ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடைபெற்றது. இதேபோல நஜாபிர் செக்டார், நீலம் பள்ளத்தாக்கு ஆகியவற்றில் முறையே, 2013 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அடுத்தடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 23ம் தேதி 6வது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது. இவ்வாறு ராஜிவ் சுக்லா தெரிவித்தார்.

முன்னதாக, நாளிதழ் ஒன்றுக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அளித்த பேட்டியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பல்வேறு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகள் நடத்தப்பட்டன. ஆனால், ராணுவத்தின் வெற்றியில் சவாரி செய்ய எங்கள் அரசாங்கம் விரும்பவில்லை என்பதால், அதை பகிரங்கமாக சொல்லிக் கொண்டது இல்லை.

ஜம்மு காஷ்மீரை தொடர்ந்து புறக்கணிக்கும் காங்கிரஸ்.. உமர் அப்துல்லா குற்றச்சாட்டு ஜம்மு காஷ்மீரை தொடர்ந்து புறக்கணிக்கும் காங்கிரஸ்.. உமர் அப்துல்லா குற்றச்சாட்டு

நமது ராணுவம் எப்போதுமே பதிலடி கொடுக்க சுதந்திரமாகத்தான் இருந்தது என்பதை மறக்க வேண்டாம். கடந்த 70 வருடங்களில் எந்த ஒரு மத்திய அரசும், ராணுவத்தின் சாதனைக்கு பின்னால் சென்று ஒளிந்து கொண்டது கிடையாது. நமது ராணுவத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது வெட்கப்படக்கூடியது, ஏற்க முடியாதது. இவ்வாறு மன்மோகன்சிங் தெரிவித்தார்.

English summary
Rajiv Shukla, Congress leader says 6 surgical strikes were conducted during Manmohan Singh govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X