டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியுடன் சேர்ந்து 60 அமைச்சர்கள் பதவியேற்பு.! கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர் பதவி

Google Oneindia Tamil News

Recommended Video

    Narendra Modi oath-taking ceremony Updates: பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி- வீடியோ

    டெல்லி: 17-வது மக்களவை தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக ஆட்சி கட்டிலில் இன்று அமர உள்ளார் மோடி. இந்நிலையில் அவருடன் சேர்ந்து புதிய மத்திய அமைச்சர்களும் இன்று பதவியேற்க உள்ளனர்.

    மக்களவை தேர்தல் நாடு முழுவதும் கடந்த மாதம் 11-ம் முதல் இந்த மாதம் 19-ம் தேதி வரை, 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் கடந்த 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றியது.

    60 ministers sworn in with Modi, how many ministerial posts in the coalition parties?

    இதில் பாஜக மட்டுமே 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை 7 மணிக்கு மோடி மற்றும் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கும் மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார்.

    இந்நிலையில் புதிய மத்திய அமைச்சரவையில் இடம்பெற போவது யார் யார் என்ற எதிர்பாா்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுமே, ஏதாவதொரு வகையில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று விட வேண்டும் என துடியாய் துடிக்கின்றன. இதில் பல கட்சிகள் 2 மத்திய அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

    ஆனால் பாஜக தலைமையோ கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சரவை பதவியை மட்டுமே தர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று மாலை மோடி பிரதமராக பதவியேற்கும் விழா நடைபெற உள்ள நிலையில், அவரது இல்லத்திற்கு சென்றுள்ள அமித் ஷா மூன்றாவது நாளாக அமைச்சரவை பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

    கடந்த ஆட்சியின் போது அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்காத அமைச்சர்களை நீக்கி புதிய அமைச்சர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தலின் போது பாஜகவிற்கு கூடுதல் இடங்கள் தந்த மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு மத்திய அமைச்சரவையில் முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன

    மேலும் இன்று பிரதமராக பதவியேற்க உள்ள மோடியுடன் சேர்த்து மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் என 50 முதல் 60-பேர் வரை அமைச்சர்களாக பதவியேற்க கூடும் என தகவல் வௌியாகியுள்ளது. இதில் 8 முதல் 10 அமைச்சர் பதவி, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

    மேலும் மோடியின் அமைச்சரவையில் அமித் ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் இடம்பெற உள்ளார்கள். தேர்தலின் போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, பாஜக-வின் வரலாற்று வெற்றிக்கு உழைத்த முக்கிய நபர்களுக்கு, ஏதேனும் பதவிகள் தரப்படலாம் என்றும் செய்திகள் உலா வருகின்றன.

    English summary
    Modi is in the 17th Lok Sabha election and is now in the seat of the Prime Minister as a prime minister. In this case, the new central ministers are to be inducted with him today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X