டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மான் கீ பாத் நிகழ்ச்சியில் அவ்வையாரை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் மான் கீ பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி அவ்வையாரின் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார்.

பிரதமர் மோடி 62-வது மான்கீ பாத் நிகழ்ச்சியில் பேசியதாவது:

62nd Mann ki Baat: PM Modi Quotes Avvaiyar

மனித குலத்துக்கு மதிப்புக்குரிய பொக்கிஷமாக திகழ்வது வேற்றுமையில் ஒற்றுமை என்பது. இதை போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

நமது நாட்டு இளைஞர்கள், குழந்தைகள் இடையே அறிவியல் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதை பார்க்கும் வகையில் காட்சிக் கூடம் அங்கே அமைக்கப்பட்டிருக்கிறது.

சந்திராயன் 2 விண்கலம் ஏவப்பட்ட நிகழ்ச்சிக்கு இஸ்ரோவுக்கு சென்ற போது மாணவர்களின் உற்சாகத்தை காண முடிந்தது. கேரளாவில் பகீரதி என்ற மூதாட்டி 9 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்தினார்.

ஆனால் தற்போது 105 வயதில் 4-ம் வகுப்பு தேர்வு எழுதி 75% மதிப்பெண்களை பெற்றுள்ளார். அவ்வையார் கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு என குறிப்பிட்டிருக்கிறார்.

கேரளாவில் பகீரதி மூதாட்டி அனைவருக்கும் முன்மாதிரியானவர். உத்வேகம் அளிக்கக் கூடியவர். அவரை நான் வணங்குகிறேன்.

மஹா சிவராத்திரியை கொண்டாடி இருக்கிறோம். அடுத்ததாக ஹோலி பண்டிகை வர உள்ளது. இத்தகைய பண்டிகைகள் சமூக கருத்துகளை உள்ளடக்கி இந்தியாவை இணைக்கின்றன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

English summary
Prime Minister Narendra Modi on Sunday addressing his monthly 'Mann ki Baat' radio address and urged people to preserve and conserve it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X