டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தலில் 7 கோடி முஸ்லிம், தலித் வாக்காளர்கள் நீக்கம்... ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ’ஷாக்’ அறிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore : லோக் சபா தேர்தலில் மோசடி நடந்துள்ளது.. 64 மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகீர் புகார்- வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தலில் 7 கோடி முஸ்லிம்கள், தலித்துகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்; ஆனால் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக எந்த விளக்கமும் தரவில்லை என 64 முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    30 ஆண்டுகளில் தற்போதைய லோக்சபா தேர்தல்தான் மிகவும் மோசடியானது என விமர்சித்து தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் ஆட்சிப் பணி அதிகாரிகள் கூட்டறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    7 crore Muslims, Dalits not on electoral rolls

    4 கோடி முஸ்லிம்கள், 3 கோடி தலித்துகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு தேர்தல் ஆணையம் சரியான விளக்கம் தரவில்லை.

    20 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மர்மமான முறையில் மாயமாகின. இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு இன்னமும் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை.

    வாக்குப் பதிவு நாளுக்கு முன்னதாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஊடகங்கள் செய்திகள் வெளியாகின. ஆனால் தேர்தல் ஆணையம் போதுமான விளக்கத்தைத் தரவில்லை.

    பதிவான வாக்குகள், எண்ணப்பட்ட வாக்குகளின் வேறுபாடுகள் குறித்தும் தேர்தல் ஆணையம் கருத்து தெரிவிக்கவில்லை. வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளில் எண்ணப்பட்டவை குறித்து எதுவுமே தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை.

    இவ்வாறு ஆட்சிப் பணி அதிகாரிகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    64 civil servants have written to the Election Commission of India that 40 million Muslims and 30 million Dalits were not on electoral rolls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X