டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சர்வதேச சுற்றுச்சூழல் தினம் இன்று... காற்று மாசால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: சர்வதேச சுற்றுச்சூழல் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972-ம் ஆண்டு சுவீடன் நாட்டின் ஸ்டாக்கோம் நகரில் ஜூன் 5-ந் தேதி கூட்டப்பட்டது. இதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் நாளாக உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆண்டுக்கு ஆண்டு சுற்றுச் சூழல் மாசடைந்து, ஓசோன் வளிமண்டலப்படலம் வலுவிழந்து சூரியனின் நேரடிக் கதிர்வீச்சின் தாக்கத்தால், பூமி அதிக வெப்பம் அடைவதற்கு காரணமாக உள்ளது. ஐ.நா சபையின் கணக்கெடுப்பின் படி, இந்தபூமியில் 3லட்சத்து 4ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன, ஆனால் மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்து இப்போது வரை 46% மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் இந்த பூமியில் இருந்து 1,530 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன.

அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 500 கோடி மரங்கள் மனித முயற்சியாலும், இயல் பாகவும் வளர்கின்றன. எப்படிப் பார்த்தாலும் ஓர்ஆண்டில் இழப்பு என்பது சுமார் 1030 கோடி மரங்கள்,ஐ.நா சபையின் கணக்கெடுப்பின் படி, இந்தபூமியில் 3லட்சத்து 4ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன, ஆனால் மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்துஇப்போது வரை 46% மரங்கள் வெட்டப்பட்டு விட்டன.

தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்.... வானிலை ஆய்வு மையம் தகவல்தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்.... வானிலை ஆய்வு மையம் தகவல்

மரங்கள் பெருமளவில் அழிப்பு

மரங்கள் பெருமளவில் அழிப்பு

இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் இந்த பூமியில் இருந்து 1530 கோடி மரங்கள் காணாமல் போகின்றன. அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 500 கோடி மரங்கள் மனித முயற்சியாலும், இயல் பாகவும் வளர்கின்றன. எப்படிப் பார்த்தாலும் ஓர் ஆண்டில் இழப்பு என்பது சுமார் 1030 கோடி மரங்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆயுட்காலம் குறையும்

ஆயுட்காலம் குறையும்

இதற்கிடையே, காற்று மாசு காரணமாக இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பிறக்கும் குழந்தைகளின் ஆயுட்காலம் இரண்டரை ஆண்டுகள் குறையும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சுகாதார நிறுவனம் உலக அளவில் காற்று மாசு காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

70 லட்சம் பேர் உயிரிழப்பு

70 லட்சம் பேர் உயிரிழப்பு

அதன்படி, கடந்த 2017 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் உட்புற மற்றும் வெளிப்புற காற்று மாசு காரணமாக வெப்பத் தாக்கம், நீரிழிவு, மாரடைப்பு, நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் சுமார் 50 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. உலகில் பத்தில் ஒன்பது பேரால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதில்லை . உலக அளவில் காற்று மாசால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிர் இழக்கின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அபாயம்

அபாயம்

பருவ நிலை மாற்றத்தால் பூமியின் நிலப்பகுதி மிக அதிகப்படியான வெப்பம் அடைவதால் காற்று மாசுபாடும் அதிகரிக்கிறது. இந்த பருவ நிலை மாற்றத்தால் விவசாயம் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் விவசாயம் பொய்த்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஆசியா, ஆப்பிரிக்காவிலுள்ள 95 சதவீத நகரங்கள் மோசமான பருவநிலை சார்ந்த அபாயங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

English summary
international environment day: Increases number of casualties in air pollution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X