டெல்லி: நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மரியாதை செலுத்த இருக்கிறார். அங்கு இருக்கும் போர் வீரர்களின் நினைவு தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார். பின்னர் விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக முப்படை அணிவகுப்பு நடக்க உள்ளது.
இந்த அணிவகுப்பின் மரியாதையை தேசிய கொடி ஏற்றிய பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொள்வார். இதையடுத்து பல்வேறு 25 அலங்கார ஊர்திகள் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளும்.
Newest FirstOldest First
10:49 AM, 26 Jan
முப்படைகளின் படைபலத்தை பறைசாற்றும் வகையில் டெல்லி அணிவகுப்பு
டெல்லியில் தேசிய கொடி ஏற்றி வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
10:26 AM, 26 Jan
25 அலங்கார ஊர்திகள் இன்று டெல்லி அணிவகுப்பில் கலந்து கொள்ளும்
10:26 AM, 26 Jan
மாநிலங்கள், அமைச்சகங்கள், படைகளின் அணிவகுப்புகள் நடக்கும்
10:26 AM, 26 Jan
டிஆர்டிஓ சார்பாக இரண்டு அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் கலந்து கொள்ளும்
10:25 AM, 26 Jan
12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அலங்கார ஊர்திகள் இன்று அணிவகுப்பில் பங்கு பெறும்
10:25 AM, 26 Jan
12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அலங்கார ஊர்திகள் இன்று அணிவகுப்பில் பங்கு பெறும்
10:25 AM, 26 Jan
12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அலங்கார ஊர்திகள் இன்று அணிவகுப்பில் பங்கு பெறும்
10:25 AM, 26 Jan
9 மத்திய அரசின் துறைகளின் அலங்கார ஊர்திகள் பங்கு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
10:25 AM, 26 Jan
9 மத்திய அரசின் துறைகளின் அலங்கார ஊர்திகள் பங்கு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
9:46 AM, 26 Jan
ராஜ்புத் ரெஜிமென்ட், அசாம் ரெஜிமென்ட், ஜம்மு காஷ்மீர் லைட் ரெஜிமென்ட், சீக்கிய லைட் ரெஜிமென்ட், ஆர்மி ஆர்டனன்ஸ் கார்ப்ஸ் மற்றும் பாராசூட் ரெஜிமென்ட் உள்ளிட்ட ராணுவ பிரிவுகளின் அணிவகுப்பு இன்று நடக்க உள்ளது
9:46 AM, 26 Jan
இன்னும் பல ரெஜிமென்ட் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள இருக்கின்றன
9:03 AM, 26 Jan
நாடு முழுக்க நடத்தப்பட்ட வந்தே பாரதம் நடன போட்டி மூலம் தேர்வான 480 டான்சர்கள் மூலம் இன்று கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன
9:02 AM, 26 Jan
இந்த கலை நிகழ்ச்சிகளை காண்பதற்காக 10 மிகப்பெரிய எல்இடி திரைகள் ராஜபாதை அருகே மக்கள் வசதிக்காக வைக்கப்பட்டு உள்ளது
8:50 AM, 26 Jan
முதல்முறையாக டெல்லி அணிவகுப்பில் இந்திய விமானப்படையின் 75 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கலந்து கொள்கின்றன
சாரங், விஜய், அம்ரித் போன்ற விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இன்று அணிவகுப்பு சாகசங்களை செய்ய உள்ளன
8:23 AM, 26 Jan
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன
8:23 AM, 26 Jan
டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் சென்னை மெரினாவில் கம்பீரமாக அணிவகுத்தன
8:22 AM, 26 Jan
வீரத்தாய் வேலுநாச்சியார் உள்ளிட்ட விடுதலைப் போராளிகள் உருவங்களுடன் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு
8:21 AM, 26 Jan
தந்தை பெரியார், மகாகவி பாரதியார், வ.உ.சி. உருவங்களுடன் அலங்கார ஊர்திகள்
8:19 AM, 26 Jan
சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது
8:15 AM, 26 Jan
வீர தீர செயல் புரிந்தவர்களுக்கான விருதுகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்
8:15 AM, 26 Jan
தமிழ்நாடு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி
8:14 AM, 26 Jan
தமிழ்நாடு கமாண்டோ படை வீரர்கள் அணிவகுத்து வந்தனர்
8:07 AM, 26 Jan
சென்னை மெரினா கடற்கரையில் முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது
READ MORE
4:38 PM, 25 Jan
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடியரசு தின உரையாற்றுகிறார்
4:38 PM, 25 Jan
73வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரை
4:38 PM, 25 Jan
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரை மாநில மொழிகளில் இரவு 9.30 மணி முதல் வானொலியில் ஒலிபரப்பாகும்
7:22 PM, 25 Jan
கொரோனாவுக்கு எதிராக இந்திய நாடு வலிமையாக போராடுகிறது எனவும், கொரோனா தொற்றுக்கு எதிராக நாம் அனைவரும் கவனத்துடன் தொடர்ந்து போராட வேண்டும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
7:23 PM, 25 Jan
கொரோனா தொற்றுக்கு எதிராக அனைவரும் கவனத்துடன் தொடர்ந்து போராட வேண்டும்
7:23 PM, 25 Jan
குடியரசு தினத்தையொட்டி குடியரசு தலைவர் உரையாற்றுகிறார்
7:23 PM, 25 Jan
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் உரை
7:23 PM, 25 Jan
கொரோனாவுக்கு எதிராக அனைவரும் கவனத்துடன் போராட வேண்டும்
7:30 PM, 25 Jan
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்ருக்கு குடியரசு தலைவர் புகழாரம்
7:30 PM, 25 Jan
நாட்டு மக்களுக்கு குடியரசு தின நல்வாழ்த்துக்கள் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
8:56 PM, 25 Jan
பிபின் ராவத்திற்கு பத்மவிபூஷன் விருது அறிவிப்பு
6:46 AM, 26 Jan
டெல்லியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது
6:46 AM, 26 Jan
குடியரசுத் தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது
6:46 AM, 26 Jan
டெல்லியில் ராணுவ மற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் நடக்க உள்ளன
6:47 AM, 26 Jan
நாட்டின் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது
7:00 AM, 26 Jan
இதனால் இந்த முறை குடியரசுத் தின விழாவிலும் பெரிய கலைநிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடக்க உள்ளது
7:00 AM, 26 Jan
நாட்டின் 75வது சுதந்திர தின வருடம் இது என்பதால் ‘ஆசாதி கா அம்ருத் மகோத்சவத்தை’ கொண்டாடப்பட்டு வருகிறது
7:06 AM, 26 Jan
இன்று காலை பிரதமர் மோடி தேசிய போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்துவதில் இருந்து குடியரசுத் தின விழா தொடங்கும்
7:06 AM, 26 Jan
எப்போதும் இல்லாத அளவிற்கு பல புதிய வகையான கொண்டாட்டங்கள் இந்த முறை நடக்க உள்ளது.
7:11 AM, 26 Jan
கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது
7:12 AM, 26 Jan
ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்
7:12 AM, 26 Jan
சென்னையில் இன்று காலை குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடைபெறுகிறது
7:15 AM, 26 Jan
10.30 மணி அளவில் தொடங்கும் இந்த அணிவகுப்புகள் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது
7:16 AM, 26 Jan
இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி முப்படை அணிவகுப்பை துவக்கி வைப்பார்
7:27 AM, 26 Jan
நாட்டின் 75வது சுதந்திர தின வருடம் இது என்பதால் ‘ஆசாதி கா அம்ருத் மகோத்சவம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
இதை முன்னிட்டு இந்த முறை குடியரசுத் தின கொண்டாட்டங்கள் ஜனவரி 23ம் தேதியே தொடங்கிவிட்டது.
ஜனவரி 23 நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் அன்றே குடியரசுத் தின கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது
7:27 AM, 26 Jan
ஜனவரி 30 வரை இந்த கொண்டாட்டம் நடக்கும்.
ஜனவரி 30 தேசிய தியாகிகள் தினம் ஆகும்.
இனி வரும் வருடங்களில் குடியரசுத் தின கொண்டாட்டம் இதேபோல் ஒரு வாரம் முழுக்க நடக்கும்
7:27 AM, 26 Jan
சென்னை ராஜாஜி சாலை போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ரவி மரியாதை செலுத்துகிறார்
7:28 AM, 26 Jan
சென்னை போர்நினைவு சின்னத்தில் முப்படை அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்
7:29 AM, 26 Jan
சென்னையில் குடியரசு தின கலைநிகழ்ச்சிகள் ரத்து- பொதுமக்கள் பங்கேற்பும் இல்லை
7:35 AM, 26 Jan
சென்னை ராஜாஜி சாலை போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார்
73rd Republic Day: This year, on January 26, 2022, India celebrates its 73rd Republic Day. In 1950, on this day, the Constitution of India came into existence. The celebrations this year are special as the Republic Day falls in the 75th year of Independence, being celebrated as 'Azadi ka Amrit Mahotsav' across the country.