டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா காலத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் 77% பெற்றோர் வேலைவாய்பு இழந்தனர்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா லாக்டவுன் காலத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் 77% பெற்றோர் வேலைவாய்ப்பை இழந்ததாக தன்னார்வ நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Vidhi Centre for Legal Policy என்ற தன்னார்வ அமைப்பு 164 மாற்றுத் திறனாளி மாணவர்கள், கொரோனா லாக்டவுனை எதிர்கொண்டது தொடர்பாக ஆய்வு நடத்தியது. மேலும் 50 ஆசிரியர்களையும் இந்த ஆய்வில் நேர்காணல் செய்தது.

77% parents of disabled children to lose jobs, says reports

10 சமூக ஆர்வலர்களிடமும் கொரோனா லாக்டவுன் காலத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகள் எதிர்கொள்ள நேரிட்ட துயரங்கள் குறித்து கேட்டறியப்பட்டது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பொதுவாக கொரோனா காலத்தில் கல்வி முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மாற்றுத் திறனாளி மாணவர்களால் இந்த டிஜிட்டல் முறைக்கு மாற இயலவில்லை.

இந்தியாவில் 1 கொரோனா நோயாளியை கண்டுபிடிக்கப் போய் 90 கேஸ்களை கோட்டை விட்டிருக்கிறோமாம்!இந்தியாவில் 1 கொரோனா நோயாளியை கண்டுபிடிக்கப் போய் 90 கேஸ்களை கோட்டை விட்டிருக்கிறோமாம்!

இதேபோல் 77% மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர் பணிக்கு செல்ல முடியாத நிலையில் வேலைவாய்ப்புகளை இழந்தனர். இந்த சூழ்நிலையால் இவர்களுக்கு ஒருவேளை உணவு என்பதுதான் சாத்தியமாகவும் இருந்தது.

இந்த இக்கட்டான தருணத்தில் அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளின் உதவியையே இந்த பெற்றோர் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலையும் இருந்தது என்கிறது இந்த ஆய்வு.

English summary
According to the reports 77% parents of disabled children to lose their jobs during Coronavirus lockdown period.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X