டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அச்சுறுத்தும் கொரோனா.. ஈரான் நாடாளுமன்றத்தில் 8 சதவீதம் பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி

Google Oneindia Tamil News

டெல்லி: ஈரான் நாடாளுமன்றத்தில் 8 சதவீதம் உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Recommended Video

    Iran Vice President has become infected with the coronavirus|ஈரான் துணை அதிபருக்கு கொரோனா பாதிப்பு

    சீனா மட்டுமல்லாமல் 70-க்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதில் தென்கொரியா, ஈரான், இத்தாலி ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    8% Iran Parliament members has Corona virus

    இந்த நிலையில் ஈரான் நாடாளுமன்றத்தில் 8 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளதாக செய்தி நிறுவனம் ஆய்வறிக்கை கூறுகிறது. இதுகுறித்து உறுப்பினர்கள் கூறுகையில் நாடாளுமன்றத்தில் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    எனினும் அவர்கள் எப்போது பாதிக்கப்பட்டனர் என்பதை கூறவில்லை. இதுகுறித்து ஈரான் நாடாளுமன்ற துணை சபாநாயகர் அப்துல் ரேசா மிஸிரி கூறுகையில் 290 உறுப்பினர்களில் 23 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகிவிட்டது. இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் குடிமக்கள் இடையேயான சந்திப்பு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஈரான் மக்கள் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும். ஈரானில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 77 ஆகிவிட்டது என்றார்.

    English summary
    8 percentage of Iran Parliament members tests Coronavirus and 23 lawmakers have been infected.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X