டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி கேட் அருகே வன்முறை.. கல்வீச்சு, கார் மீது தீவைப்பு.. 8 சிறுவர்கள் உள்பட 40 பேர் கைது

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி கேட் அருகே வன்முறை வெடித்ததை அடுத்து 8 சிறுவர்கள் உள்பட 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லீம் சமூகத்தினரின் பெயர்களும், இலங்கை தமிழர்களின் பெயர்களும் விடுபட்டுள்ளது. இதை கண்டித்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

8 minors among 40 detained after violence near Delhi Gate

டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டெல்லி கேட் அருகே போராட்டம் நடந்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை அன்று மாலை மசூதியில் தொழுகைக்கு பிறகு தர்யாகஞ்சில் ஏராளமானோர் கூடினர்.

அமைதியாக போராட்டம் நடத்திய போது சிலர் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் மீது கற்களை வீசினர். இதைத் தொடர்ந்து போலீஸார் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சில போராட்டக்காரர்கள் மீண்டும் கற்களை வீசினர்.

ஜார்க்கண்ட் முதல்வர் பதவிக்கு இவர்தான் பெஸ்ட்.. சோரனை நோக்கி கையைக் காட்டும் எக்சிட் போல் கணிப்பு!ஜார்க்கண்ட் முதல்வர் பதவிக்கு இவர்தான் பெஸ்ட்.. சோரனை நோக்கி கையைக் காட்டும் எக்சிட் போல் கணிப்பு!

இதையடுத்து துணை காவல் ஆணையரின் அலுவலகத்தில் இருந்த கார் தீவைத்து கொளுத்தப்பட்டது. பின்னர் லேசாக தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

இந்த சம்பவத்தில் போலீஸார் 40 பேரை கைது செய்தனர். அவர்களில் 8 பேர் சிறுவர்கள். இதையடுத்து 8 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் மீதமுள்ளவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

English summary
After Violence in Delhi gate in Daryaganj, 8 minors including 40 were detained on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X