டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்கள் ராஜ்யசபா வளாகத்தை விட்டு வெளியேற மறுப்பு - நள்ளிரவிலும் தர்ணா

ராஜ்யசபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் சமூக இடைவெளியுடன் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜ்யசபாவில் கடும் அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார். டெரிக் ஓ பிரையன் கே.கே.ராஜேஷ், ராஜீவ் சத்வவ், ரிபுன் போரா, டோலா சென், சையது நாசர் உசேன், சஞ்சய் சிங், எளமறம் கரீம் ஆகியோர் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது. சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து விடிய விடிய எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

8 MPs Suspended Over Farm Bills Row Refuse to Leave RS After Adjournment

இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம் மத்திய அரசு மீது விவசாயிகள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இது விவசாயிகளுக்கு எதிரானது கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானது என்று கூறி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராஜ்யசபாவில் குரல் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாக வேளாண் மசோதாக்கள் கிழித்து எறியப்பட்டன. சபை தலைவர் இருக்கை முன்பாக டெரிக் ஓ பிரெய்ன் உள்ளிட்ட எம்பிக்கள் முழக்கமிட்டனர். அப்போது சபை தலைவர் இருக்கையில் இருந்த மைக் உடைக்கப்பட்டது.

இந்த களேபரங்களுக்கு இடையே ராஜ்யசபா இன்று கூடியது. வேளாண் மசோதாக்கள் மீதான குரல் வாக்கெடுப்பில் குளறுபடி நடந்து இருப்பதாகவும், மசோதாவிற்கு போதுமான ஆதரவு இல்லை என்று கூறியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ராஜ்யசபா துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

எம்பிக்கள் நீக்கம்... ஜனநாயகத்தின் மீது அடக்குமுறை தொடர்கிறது.... ராகுல் காந்தி கண்டனம்!!எம்பிக்கள் நீக்கம்... ஜனநாயகத்தின் மீது அடக்குமுறை தொடர்கிறது.... ராகுல் காந்தி கண்டனம்!!

அதேசமயம், அமளியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ராஜ்யசபா விதி 256இன் கீழ் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து அவை தலைவரான வெங்கையா நாயுடு, டெரிக் ஓ பிரெய்ன் உள்ளிட்ட 8 எம்.பிக்களை ஒரு வார காலம் சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து ராஜ்யசபாவில் தொடர்ந்து அமளி நீடித்தது. இதனால் சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. துணை சபாநாயகர் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பல்வேறு கட்சி எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜ்யசபாவில் கடும் அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார். டெரிக் ஓ பிரையன் கே.கே.ராஜேஷ், ராஜீவ் சத்வவ், ரிபுன் போரா, டோலா சென், சையது நாசர் உசேன், சஞ்சய் சிங், எளமறம் கரீம் ஆகிய 8 பேரும் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது.

வேளாண் மசோதாக்களின் மீது விவாதம் நடத்தாமல் தாக்கல் செய்தது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் செயல் என குற்றம்சாட்டியுள்ள எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும் ராஜ்யசபா நடவடிக்கைகள் முடிந்த பின்னரும் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே அமர்ந்து பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக திமுக எம்.பி.திருச்சி சிவா, சிவசேனா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

English summary
Venkaiah Naidu has ordered the suspension of 8 MPs who were involved in a scuffle in the Rajya Sabha. They will not be able to attend the entire series. MPs have been fighting the Tarna protest all night condemning the suspension.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X