• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

8 மாநில ஆளுநர்கள் மாற்றம்-ஆனாலும் புதுவையில் கூடுதல் பொறுப்புடன் தொடரும் தமிழிசை..பாஜக மாஸ்டர் பிளான்

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த நான்கு மாதங்களாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாகப் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக உள்ளார். அவர் சில காரணங்களுக்காகத் தேவை என பாஜக கருதுவதாலேயே இன்று எட்டு மாநில ஆளுநர்கள் மாற்றப்பட்ட போதிலும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக யாரும் நியமிக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. மத்திய அரசு கொரோனாவை முறையாகக் கையாளவில்லை எனக் காங்கிரஸ் தொடங்கி பலரும் விமர்சித்து வந்தனர்.

அந்த 6 மாநிலங்கள்.. டெல்டா பிளஸ்...கொரோனா 2-ம் அலை ஓயவில்லை என மத்திய அரசு சொல்வதன் பின்னணி! அந்த 6 மாநிலங்கள்.. டெல்டா பிளஸ்...கொரோனா 2-ம் அலை ஓயவில்லை என மத்திய அரசு சொல்வதன் பின்னணி!

இதனால் மக்கள் மத்தியில் பாஜகவுக்கு அவப்பெயர் ஏற்பட்டதை யாராலும் மறுக்க முடியாது. அடுத்தாண்டு ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் இமேஜ் உயர்த்தும் நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு தொடங்கியுள்ளது.

அமைச்சரவை மாற்றம்

அமைச்சரவை மாற்றம்

சில நாட்களில் பிரதமர் மோடியின் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் தேர்தல் நடைபெறும் உத்தரப் பிரதேசம் தவிர மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸிலிருந்து விலகிக் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகா ஆளுநர்

கர்நாடகா ஆளுநர்

அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுபவர்களை நாளை முதல் பாஜக தலைவர் ஜே பி நட்டா நேரில் சந்திக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகக் கர்நாடக மாநில ஆளுநராக சமூக நீதித் துறை அமைச்சராக உள்ள தாவர்சந்த் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளார். 73 வயதான தாவர்சந்த் கெலாட் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி

அதேபோல ஹரியானா, திரிபுரா, இமாச்சல் பிரதேசம், மிசோரம், மத்தியப் பிரதேசம் என மொத்தம் எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்குத் துணைநிலை ஆளுநராக யாரும் புதிதாக நியமிக்கப்படவில்லை.

என்ன காரணம்

என்ன காரணம்

புதுச்சேரியில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு கிரண் பேடி துணை நிலை ஆளுநராக இருந்தார். அப்போது பொறுப்பிலிருந்த காங்கிரஸ் அரசுக்கும் அவருக்கும் மோதல் போக்கே நிலவி வந்தது. இதையடுத்து தேர்தலுக்கு சில காலத்திற்கு முன் பிப்ரவரி மாதம் கிரண் பேடி ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனுக்குப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.

கூட்டணி அரசு

கூட்டணி அரசு

புதுச்சேரியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இருப்பினும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து 10 இடங்களில் வென்ற என்ஆர் காங்கிரஸ் - பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. இருப்பினும், அமைச்சரவை முடிவு செய்வதில் நீண்ட இழுபறி நிலவியது. சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னரே கடந்த ஜூன் இறுதியில் அமைச்சர்கள் பதவியேற்றனர். சபாநாயகர் பதவியும் இரண்டு அமைச்சர் பதவியும் பாஜகவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு சிக்கல்

பாஜகவுக்கு சிக்கல்

என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் இப்போது வரை எந்த சிக்கலும் இல்லை. இருப்பினும், என்ஆர் காங்கிரஸில் இருந்த சிலரே கூட கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றுள்ளனர். அவர்கள் தற்போது வரை என்ஆர் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பாஜகவுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

விருப்பம்

விருப்பம்

இதனால் மூத்த அரசியல்வாதியாக மட்டுமின்றி, புதுச்சேரி அரசியலின் தட்பவெப்பங்களை அறிந்த நபரைத் துணைநிலை ஆளுநராக இருக்க வேண்டும் என்பது பாஜகவின் சாய்ஸ். தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தபோதே சிறப்பாகச் செயல்பட்டவர் தமிழிசை சவுந்தரராஜன். இதனால் அவரே புதுச்சேரிக்கு இன்னும் சில காலம் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்பது அக்கட்சியினரின் விருப்பமாக உள்ளது.

ஆளுநர் மாற்றப்படவில்லை

ஆளுநர் மாற்றப்படவில்லை

அரசியலில் நீண்ட அனுபவம் கொண்டவர் என்பதால் வரும் காலங்களில் என்ஆர் காங்கிரஸ் எதாவது குடைச்சல் கொடுத்தால் அதை தமிழிசை சிறப்பாகக் கையாள்வார். இந்தியாவிலேயே தற்போது தமிழிசை சவுந்தரராஜன் மட்டும்தான் இரு மாநிலங்களுக்கு ஆளுநராகத் தொடர்கிறார். புதுச்சேரியில் வலுவான ஒரு பிடி இருக்க வேண்டும் என பாஜக கருதுவதாலேயே எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், புதுச்சேரிக்குத் துணைநிலை ஆளுநராக யாரும் நியமிக்கப்படவில்லை.

English summary
The Center still doesn't announce lieutenant governor for Puducherry. For over 4 months Telangana governor Tamilisai Soundararajan is acting as lieutenant governor of Puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X