டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,96,618. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1,07,73,440. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,61,514. கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,57,088.

86.37% of new Corona cases from 6 states including TamilNadu

கொரோனா மொத்த பாதிப்பில் முதல் 5 இடங்களில் இருப்பது மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம். இந்த நிலையில் தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மொத்த கொரோனா பாதிப்பில் 86.37% இந்த 6 மாநிலங்களில் இருந்து உருவானது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பிரேசிலில் 1 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு.. பிரிட்டனில் குறைந்த 24 மணி நேர பாதிப்பு! பிரேசிலில் 1 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு.. பிரிட்டனில் குறைந்த 24 மணி நேர பாதிப்பு!

இதில் தமிழகம், கேரளா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே கொரோனா கண்காணிப்பு, கட்டுப்பாடுக்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை மார்ச் 31-ந் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Centre said that Maharashtra, Kerala, Punjab, Karnataka, Tamil Nadu and Gujarat have shown a surge in new Coronavirus cases in the last 24 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X