டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்திய அரசு-விவசாயிகள் இடையே 8வது சுற்று பேச்சு வார்த்தை தோல்வி.. 15ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களை திரும்பப்பெறுவது, விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை வரும் 15ஆம் தேதி நடத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.

மத்திய அரசு கொண்டுவந்த 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடும் குளிரிலும் விவசாயிகள் 40 நாட்களுக்கு மேலாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

8th round of talks with govt fails to end deadlock

இதுவரை நடந்த 7 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் நிறைவடைந்த நிலையில், மந்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையிலான அரசு தரப்பு குழுவுடன், விவசாயிகள் இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் 8வது சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

முதுநிலை சட்டக் கல்விக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு கூடாது.. அறிவிப்பை திரும்ப பெறுக- ஸ்டாலின்முதுநிலை சட்டக் கல்விக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு கூடாது.. அறிவிப்பை திரும்ப பெறுக- ஸ்டாலின்

பாரதிய கிசான் யூனியன் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாய்த், கூறுகையில் அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஒருபோதும் நாங்கள் பணிய மாட்டோம். மீண்டும் 15ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருவோம். நாங்கள் வேறு எங்கும் செல்ல மாட்டோம். அரசு தொடர்ந்து, சட்டத்திருத்தம் பற்றிதான் பேசுகிறது. ஆனால், அது பற்றி விவாதிக்க நாங்கள் விரும்பவில்லை என்றார்.

English summary
The eighth round of negotiations between the protesting farmer unions and the Centre on Friday ended on an inconclusive note.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X