டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திறமைக்கு பஞ்சமாம்.. மத்திய அரசு இணை செயலாளர்களாக 9 தனியார் நிறுவன ஊழியர்கள் நியமனம்

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் இணை செயலாளர்கள் பதவிகளில், தனியார் நிறுவனங்களை சேர்ந்த 9 பேர், முதல்முறையாக ஒப்பந்த முறையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவிக்கு பொதுவாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் , ஐஆர்எஸ் படித்தவர்களே நியமனம் செய்யப்படுவார்கள். இவர்களை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையமான யூபிஎஸ்சி தேர்வு வைத்து வேலைக்கு எடுக்கும்.

9 private sector specialists selectedt as joint secretaries in central government departments

இந்நிலையில் மத்திய அரசு இணைச்செயலாளர் பணியில் திறமையான தனியார் ஊழியர்களை சேர்க்க, கடந்த ஜுன் மாதம் லேட்ரல் என்ட்ரி என்ற முறை கொண்டுவரப்பட்டது. இதன் படி இணைசெயலாளர் பதவிக்கு தனியார் நிறுவன ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதன்படி தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் கடந்த ஜுலை 30ம் தேதி வரை விண்ணப்பித்தனர்.

கருணாநிதி மறைந்த போது நடந்தவற்றை சொல்லி... கதறி அழுத உதயநிதி ஸ்டாலின் கருணாநிதி மறைந்த போது நடந்தவற்றை சொல்லி... கதறி அழுத உதயநிதி ஸ்டாலின்

மொத்தம் 6077 ஊழியர்கள் மத்திய அரசின் இணைச்செயலாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு மத்திய அரசின் தேர்வாணையமான யூபிஎஸ்சி, சிவில் சர்வீஸ் தேர்வினை வைத்தது. இதன் மூலம் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 9 பேரை மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த விவரம் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியாகி உள்ளது

அவர்களின் விவரம் ஆம்பர் துபே, அருண் கோயல், ராஜுவ் சக்சேனா, சுஜித் குமார் பாஜ்பாயி, சுராப் மிஸ்ரா, தினேஷ் தயாந்த், சுமன் பிரசாத், பூஷண் குமார் என 9பேர், மத்திய அரசின் 9 துறைகளின் இணை செயலாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

English summary
Modi government to bring in fresh talent Nine private sector specialists selectedt as joint secretaries in central government departments
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X