டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட.. அட.. இதுதான் பிரச்சாரம்.. என்னடா இது பாஜகவிற்கு வந்த சோதனை - வீடியோ!

பாஜகவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கூடிய கூட்டம் ஒன்றின் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    என்னடா இது பாஜகவிற்கு வந்த சோதனை - வீடியோ!

    டெல்லி: பாஜகவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கூடிய கூட்டம் ஒன்றின் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி இருக்கிறது.

    லோக்சபா தேர்தல் படு தீவிரமாக நாடு முழுக்க நடந்து வருகிறது. ஏப்ரல் 11 ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த நிலையில் தற்போது ஏப்ரல் 18ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

    A BJPs election campaign video becomes viral due to these dogs

    இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. முக்கியமாக பாஜக சார்பாக மிக தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில்தான் பாஜக நடத்திய தேர்தல் பிரச்சாரம் ஒன்று பெரிய அளவில் வைரலாகி உள்ளது. வடஇந்தியாவில் இந்த தேர்தல் பிரச்சாரம் நடந்துள்ளது. பாஜகவை சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் பேசும் பிரச்சார கூட்டம் ஆகும் இது.

    ஆனால் இதில் பாஜக தலைவர்கள் பேசும் போது அதை யாரும் நின்று கேட்கவில்லை. மக்கள் உட்காரும் இடம் முழுக்க காலியாக இருந்துள்ளது. மிக மிக சொற்பமான எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் அங்கு இருந்துள்ளனர். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அது கிடையாது.

    பாஜக தலைவர்கள் பிரச்சார கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கு சில தெருநாய்கள் வந்து இருக்கிறது. வரிசையாக வந்த தெருநாய்கள் பாஜகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை கவனமாக கேட்டு உள்ளது. பாஜக தலைவர்களும் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

    மோடியை திருடர் என்று விமர்சிப்பதா? ராகுல் மீது பாஜக வழக்கு.. உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்! மோடியை திருடர் என்று விமர்சிப்பதா? ராகுல் மீது பாஜக வழக்கு.. உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

    இந்த காமெடியான நிகழ்வு தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பலர் இணையத்தில் ஷேர் செய்து கிண்டல் செய்து வருகிறார்கள்.

    English summary
    A BJP's election campaign video becomes viral due to these street dogs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X