டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்.. ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் சதி இது.. பரபர ஆதாரங்கள்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாருக்கு பின் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று இருப்பதாக வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஞ்சன் கோகாய் மீது புகார் கூறிய பெண் ஜாமீனை ரத்து செய்க: நீதிமன்றத்தில் வாதம்- வீடியோ

    டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாருக்கு பின் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று இருப்பதாக வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சில முக்கிய ஆதாரங்களையும் அவர் கோர்ட்டில் சமர்ப்பித்து இருக்கிறார்.

    கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயதாகும் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். ஜூனியர் பணியாளாக உச்சநீதிமன்றத்தில் இவர் பணியாற்றி வந்தவர்.

    இந்த குற்றச்சாட்டை தலைமை நீதிபதி மறுத்து இருந்தார். இது தொடர்பான வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.

    ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஜாமீனை ரத்து செய்க.. நீதிமன்றத்தில் போலீஸ் வாதம்ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஜாமீனை ரத்து செய்க.. நீதிமன்றத்தில் போலீஸ் வாதம்

    இன்னொரு பக்கம்

    இன்னொரு பக்கம்

    அதே சமயம் இன்னொரு பக்கம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பொய்யான பாலியல் புகார் சுமத்தினால் ரூ.1.5 கோடி தருவதாக சிலர் தன்னை அணுகியதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் பேட்டி அளித்து இருக்கிறார். இவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரம் இன்று விசாரணைக்கு வந்தது.

    யார் விசாரணை

    யார் விசாரணை

    தனி அறையில் இந்த விசாரணை நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் அமர்வு இதை விசாரித்தது. இந்த வழக்கில் சிபிஐ, என்ஐஏ, டெல்லி போலீஸ், உளவுத்துறை ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்கள் விசாரிக்கப்பட்டார்கள். இதில் எழுத்து பூர்வ வாதம் வைத்த வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் பல முக்கிய ஆதாரங்களை வெளியிட்டார்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    அவர் பின்வரும் முக்கிய விஷயங்களை வெளியிட்டார். அதில், தலைமை நீதிபதிக்கு எதிராக ஒரு கார்ப்ரேட் குழு இயங்கி வருகிறது. ஒரு பெரிய கார்ப்ரேட் நிறுவனத்தின் ஆலோசகர் இது தொடர்பாக என்னை வந்து சந்தித்தார். இதற்கான சிசிடிவி ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அதை நான் இப்போதே சமர்ப்பிக்கிறேன்.

    கடும் விவாதம்

    கடும் விவாதம்

    இதில் வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் நரேஷ் கோயல் என்ற நபரின் பெயரையும் குறிப்பிட்டார். நரேஷ் கோயல்தான் ஜெட் ஏர்வேஸை தொடங்கியவர். இவர் மீதும் தற்போது வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் புகார் அளித்துள்ளதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் பலரின் பெயரை பட்டியலிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

    கடுமை காட்டினார்

    கடுமை காட்டினார்

    இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா கடுமையான கேள்விகளை எழுப்பினார். அதில் தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டு பொய்யாக இருந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டோம். கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை கண்டறியவில்லை எனில் நீதித்துறை மீதான நம்பகத்தன்மை போய்விடும், என்று குறிப்பிட்டார்.

    English summary
    A corporate company in working against CJI says Bains in the case against Ranjan Gogoi in SC.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X