டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் ஒரே நாளில் சுமார் 8000 பேருக்கு கொரோனா.. உயிரிழப்பு கிடுகிடு உயர்வு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில ஒரே நாளில் சுமார் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவில் மிகப்பெரிய உச்ச பட்ச பாதிப்பு ஆகும்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,964 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத மிகப்பெரிய உச்ச பட்ச பாதிப்பு ஆகும்.

இதனால், இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 165,799 இலிருந்து 173,763 ஆக ஒரே நாளில் உயர்ந்துள்ளது. அதாவது ஒரு நாளில் பாதிப்பு எண்ணிக்கை 4.8% அதிகரித்துள்ளது. இறப்பு எண்ணிக்கை இந்தியாவில் 4,971 ஆக உயர்ந்துள்ளது. எட்டியுள்ளது, சனிக்கிழமையான இன்று இதுவரை 265 புதிய இறப்புகள் இந்தியா முழுவதும் கொரோனாவால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சீரியஸ்னஸ் அதிகரிக்கலாம்.. தயாராக இருக்கிறோம்.. தமிழக மருத்துவ நிபுணர் குழு வார்னிங் இன்னும் சீரியஸ்னஸ் அதிகரிக்கலாம்.. தயாராக இருக்கிறோம்.. தமிழக மருத்துவ நிபுணர் குழு வார்னிங்

குறைந்தது பாதிப்பு

குறைந்தது பாதிப்பு

இந்தியாவில் ஒரு நாளில் 11,264 பேர் குணம் அடைந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்றுடன் இந்தியாவில் உள்ளவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 89,987 ஆக இருந்த நிலையில், 4% குறைந்து 86,422 ஆக மாறி உள்ளது.. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 4.5 சதவீத புள்ளிகள் அதிகரித்து 47.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 265 பேர் உயிரிழந்திருப்து இது தான் இந்தியாவில் கொரோனாவால் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழப்பு என்பது 2.9% ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் குறைவு

இந்தியாவில் குறைவு

இந்தியாவின் 5 நாள்களில் ஏற்படும் சராசரி தினசரி வீதத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4.6% ஆக குறைந்துள்ளது. மொத்தமாக கொரோனா தொற்று அப்படியே இந்தியாவில் டபுள் ஆகும் விகிதம் 15.1 நாட்களில் இருந்து 14.8 நாட்களாகக் குறைந்துள்ளது.

மகாராஷ்டிரா அதிகம்

மகாராஷ்டிரா அதிகம்

நேற்று இந்தியாவில் டெல்லி (1,105), தமிழ்நாடு (874), கர்நாடகா (248), ஹரியானா (217), உத்தரகண்ட் (216), தெலுங்கானா (169), அசாம் ( 168), மற்றும் மேகாலயா (6) உள்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பபட்டது. நாட்டில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 2,682 பேர் பாதிக்கப்பட்டனர்.இதனால் அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,228 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 13 நாட்களில் ஒவ்வொரு நாளும் 2,000 க்கும் மேற்பட்டோருக்கு மகாராஷ்டிராவில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த 12 நாட்களில் மட்டும் மகாராஷ்டிராவில் 50.7% (31,522) தொற்றுகள் அதிகரித்துள்ளது.

Recommended Video

    விமானிக்கு கொரோனா... அவசரமாக திரும்பி Air India விமானம்
    20 ஆயிரத்தை கடந்தது

    20 ஆயிரத்தை கடந்தது

    கொரோனாவால் நாட்டில் இரண்டாவது அதிக பாதிப்புக்குள்ளான மாநிலமான தமிழ்நாட்டில் 874 பேருக்கு நேற்று தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதுதான் தமிழகத்தில் நேற்று நிலவரப்படி ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாகும். 13 வது நாளாக தொடர்ந்து 400 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 20,000த்தை (20,246 ஆக) கடந்துள்ளது. டெல்லியில் 1,105 தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் டெல்லியில் மொத்த கொரோனா பாதிப்பு 17,386 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் குஜராத்தில் வெறும் 8.8% ஆகும், ஆனால் அங்குதான் இறப்பு விகிதம் மிக அதிகபட்சமாக 19.7% ஆக உள்ளது.

    English summary
    With a daily increase of 7,964 in total cases, the biggest single-day jump yet, India’s total tally has risen from 165,799 to 173,763, an increase of 4.8%. Death toll has reached 4,971, with 265 new fatalities being reported on Saturday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X