டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பார்க்க அனுமதி கிடையாது.. ப. சிதம்பரத்தை சந்திக்க சென்ற காங். தலைகள்.. திகார் நிர்வாகம் கெடுபிடி!

திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். தற்போது ப. சிதம்பரம் திகார் சிறையில் இருக்கிறார்.

ஏற்கனவே சிபிஐ காவலில் இவர் 15 நாட்கள் விசாரிக்கப்பட்டார். தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

திகார் சிறையில் முதல் நாள்.. சரியா தூக்கம் வரலை.. புரண்டு புரண்டு படுத்து தவித்த ப.சிதம்பரம்திகார் சிறையில் முதல் நாள்.. சரியா தூக்கம் வரலை.. புரண்டு புரண்டு படுத்து தவித்த ப.சிதம்பரம்

சிறை

சிறை

திகார் சிறையில் ப. சிதம்பரத்திற்கு பெரிதாக வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. அவர் தற்போது திகார் சிறையில் 7வது அறையில் உள்ளார். அவர் இரவு முழுக்க சரியாக உறங்கவில்லை. காலையில் சரியாக சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.

சந்திப்பு

சந்திப்பு

இந்த நிலையில் ப. சிதம்பரத்தை சந்திக்க காங்கிரஸ் தலைவர்களின் குழு ஒன்று திகார் ஜெயிலுக்கு இன்று சென்றது. காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், மாணிக்கம் தக்கூர், அவினாஷ் பாண்டே உள்ளிட்ட தலைவர்கள் அங்கே சென்றனர். அதேபோல் காங்கிரஸ் தொண்டர்கள் சிலரும் சென்றனர்.

அனுமதி இல்லை

அனுமதி இல்லை

ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் ப. சிதம்பரத்தை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் அதிக பேர் கூட்டமாக வந்துள்ளதாக கூறி வெளியேற்றப்பட்டனர். அதேபோல் இவர்கள் யாரும் முறையாக சந்திக்க அனுமதி வாங்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

நாளைதான்

நாளைதான்

இன்று ப. சிதம்பரத்தை சந்திக்க முடியாது. நேரம் முடிந்துவிட்டது. நாளை அவரை சந்திக்க வேண்டும் என்றால் முறையாக அனுமதி வாங்கி கொண்டு வாருங்கள் என்று கட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ப. சிதம்பரத்தை இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் யாரும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

English summary
A delegation of Congress leaders were not allowed to meet former minister P Chidambaram in Jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X