அச்சோ பாவம்.. மழையில் நனைந்த நாயை.. துணியால் மூடிய இளம் பெண்.. வைரல் புகைப்படம்
டெல்லி: மழையில் நனைந்த ஒரு தெருநாய்க்கு துணியை கொண்டு போர்த்திய புகைப்படம் வைரலாகி வருகிறது.
துயரத்தில் இருக்கும் வாயில்லா ஜீவன்களுக்கும் இயலாதோருக்கும் நாம் உதவிகளை செய்ய வேண்டும். சிலர் இதற்காக மெனக்கெட்டு உதவிகளை செய்வர். சிலர் நமக்கென்ன வந்தது என நினைத்து சென்றுவிடுவர்.
"இரக்கத்துடன் எந்த வித பிரதிபலனையும் எதிர்பாராமல் அதே சமயம் நமக்கும் பாதுகாப்பு என கருதினால் அந்த உதவியை செய்துவிடுங்கள். அதே போன்று நீங்கள் துயரத்தில் இருக்கும் போது உங்களுக்கும் யாராவது உதவி செய்வார்கள்".
சென்னையில் கொடுமை- கொரோனாவால் குணமடைந்தவரின் வீட்டை தகரம் அடைத்து மூடிய பல்லாவரம் நகராட்சி!

நல்ல மழை
இந்த பொன்மொழிகளை கூறியது இளவரசி டயானா ஆவார். அது எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்கு தெரிகிறது. ஒரு தெருவில் ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.

ட்விட்டர் பக்கம்
அந்த தெருவில் நாய் ஒன்று குளிரால் வாடுகிறது. இதை கண்ட அந்த பெண் அந்த நாய்க்கு ஒரு துணியை எடுத்து போர்த்தி விடுகிறார். இதை வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதயம்
இந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் அந்த பெண்ணின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறார்கள். மேலும் நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள் என்பதை கடவுள் பார்க்க மாட்டார், உங்களின் இதயத்தையும் உதவிகளையும் மட்டுமே அவர் பார்ப்பார் என வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

லைக்ஸ்
அந்த பெண்ணின் இதயம் தங்கத்தால் ஆனது என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளார்கள். மனிதம் இன்னும் வாழ்கிறது என்று ஒரு நெட்டிசன் கூறுகிறார். இந்த ட்வீட் போடப்பட்ட ஒரு மணி நேரத்தில் 5000 பேர் பார்த்தனர். 700 லைக்ஸ்கள் விழுந்தன. இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.