டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய அரசியலின் மாபெரும் அத்தியாயம் முடிந்து போனது.. சுஷ்மா மரணம்.. மோடி வேதனை

Google Oneindia Tamil News

Recommended Video

    Sushma Swaraj - முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

    டெல்லி: இந்திய அரசியலின் மாபெரும் அத்தியாயம் ஒன்று இன்று முடிவுக்கு வந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

    முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 67. அவரது மரணச் செய்தி அறிந்து பாஜகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

    A glorois chapter in Indian politics has end, says PM Modi

    சுஷ்மாவின் மரணச் செய்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி வேதனை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில்.. இந்திய அரசியலில் மாபெரும் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. தனது வாழ்க்கை முழுவதையும் பொதுச் சேவைக்காகவே ஒப்படைத்த ஒரு மாபெரும் தலைவரின் மரணத்தால் நாடே சோகமாகியுள்ளது.

    25 வயதிலேயே எட்ட முடியாத உயரத்தை தொட்டவர்.. ஓடோடி உதவிய கரங்கள்.. போய் வாருங்கள் சுஷ்மா சுவராஜ்! 25 வயதிலேயே எட்ட முடியாத உயரத்தை தொட்டவர்.. ஓடோடி உதவிய கரங்கள்.. போய் வாருங்கள் சுஷ்மா சுவராஜ்!


    ஏழைகளின் உயர்வுக்காக தொடர்ந்து பாடுபட்டவர் சுஷ்மா சுவராஜ். பல கோடி மக்களுக்கு ஆதர்ச சக்தியாக உதாரணமாக திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ். மிகச் சிறந்த நிர்வாகி, தான் பதவி வகித்த அமைச்சரவையில் தனி முத்திரை பதித்தவர் சுஷ்மா சுவராஜ். பல்வேறு நாடுகளுடன் இந்தியாவின் உறவு மேம்பட தீவிரமாக பாடுபட்டவர். முக்கியப் பங்காற்றியவர்.

    என்ன ஒரு கம்பீரம்.. மறக்க முடியாத சுஷ்மா!

    வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியபோது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நலனில் தனி அக்கறை காட்டினார். பலருக்கு உதவியுள்ளார். அனுதாபத்துடன் செயல்பட்டார் என்று மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

    English summary
    PM Modi has expressed his condolencess on the death of former external affairs minister Sushma Swaraj.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X