டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெருமித வரலாறு... விஜய் திவஸ் அல்லது வெற்றி தினம்.. டிசம்பர் 16-ல் ஏன் கொண்டாடப்படுகிறது?

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு ஆண்டுதோறும் டிசம்பர் 16-ந் தேதியை விஜய் திவஸ் அல்லது வெற்றி தினமாக கொண்டாடுகிறது. இந்திய ராணுவத்தின் தீரமிகு வரலாற்று பெருமிதத்தை சொல்கிற நாள்தான் டிசம்பர் 16 விஜய் திவஸ் (விஜய் திவாஸ்).

1971-ம் ஆண்டு டிசம்பர் 16ம் நாள்...

பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஜெனரல் ஆமிர் அப்துல்லா கானும் அவரது 93,000 படைவீரர்களும் இந்திய- வங்கதேச ராணுவத்திடம் சரணடைந்த நாள்.

 A History of Vijay Diwas day on Dec 16.

கிழக்கு பாகிஸ்தானாக இருந்த இன்றைய வங்கதேசம், பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் ஒடுக்குமுறைக்குள்ளானது. இனப்படுகொலைக்குள்ளான வங்கதேச மக்களுக்கு ஆதரவாக இந்திய தேசம் களமிறங்கியது.

இதனால் 1971-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே யுத்தம் மூண்டது. இந்தியாவும் வங்கதேச விடுதலை ராணுவமான முக்தி பாகினியும் பாகிஸ்தானை இந்த யுத்தத்தில் வீழ்த்திக் கொண்டே வந்தன.

இந்தியா- பாகிஸ்தான் இடையே மொத்தம் 13 நாட்கள் யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தத்தின் முடிவு நாள்தான் டிசம்பர் 16. 93,000 படைவீரர்களுடன் பாகிஸ்தான் சரணடைய வங்கதேசம் எனும் புதிய தேசம் பிறந்தது.

வங்கதேச விடுதலைப் போர்... வங்க கடலில் மர்மமாய் 'மாண்டுபோன' பாக். நீர்மூழ்கி கப்பல் காஸி!வங்கதேச விடுதலைப் போர்... வங்க கடலில் மர்மமாய் 'மாண்டுபோன' பாக். நீர்மூழ்கி கப்பல் காஸி!

இந்த யுத்தத்தில் வீரமரணம் அடைந்த மகத்தான மாவீரர்களின் தியாகங்களைப் போற்றும் விதமாக விஜய் திவஸ் டிசம்பர் 16-ல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. டெல்லி இந்தியா கேட்டில் முப்படை தளபதிகளும் நமது மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவர்.

நடப்பாண்டில் வங்கதேசத்தில் இருந்து 50 விடுதலைப் போராட்ட வீரர்கள் விஜய் திவஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா வருகை தந்துள்ளனர். கொரோனா பரவல் இருப்பதால் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படவும் இல்லை.

நமது தேசத்தின் புனித ஆன்மாக்களாகிய மாவீரர்களின் மகத்தான தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்!

English summary
A History of Vijay Diwas day on Dec 16.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X