டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இப்படியே பதற்றம் தொடர்ந்தால் சீனாவுடன் மிகப்பெரிய மோதல் ஏற்படலாம்.. முப்படை தளபதி வார்னிங்

Google Oneindia Tamil News

டெல்லி: எல்லையில் தொடர்ந்து மோதல்கள் நீடித்தால் சீனாவுடன் ஒரு "பெரிய மோதல்" ஏற்படலாம் என்று முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் எச்சரித்துள்ளார். சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்படுவதால் எல்லையில் பதற்றம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்றார்.

டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த ஒரு வெபினாரில் முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் லடாக்கில் அத்துடீமீறி நடந்து கொண்டதற்காக எதிர்பாராத விளைவுகளை எதிர்கொள்கிறது,

எல்லைக்கோட்டை மாற்றம் பேச்சக்கே இடமில்லை. இந்திய இராணுவம் உறுதியான மற்றும் வலுவான பதில் நடவடிக்கை எடுத்துள்ளது. சீனாவின் தொடர்ச்சியாக அத்துமீறல்கள் காரணமாக மீண்டும் ஒரு மோதல் ஏற்படாது என உறுதி செய்ய முடியாது.

கடைசி நேரத்தில் செம்ம திருப்பம்.. பென்சில்வேனியா, ஜார்ஜியாவிலும் மாறும் முடிவு.. டிரம்ப் ஷாக்கடைசி நேரத்தில் செம்ம திருப்பம்.. பென்சில்வேனியா, ஜார்ஜியாவிலும் மாறும் முடிவு.. டிரம்ப் ஷாக்

பினாமி போர்

பினாமி போர்

அணு ஆயுதம் ஏந்திய இரு அண்டை நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து மோதல்களை நடத்தி வருகிறது. சீனா, பாகிஸ்தானுக்கு பல்வேறு வகையில் ஆதரவு அளித்து வருகிறது. சீனா மட்டுமில்லாமல், ஜம்மு-காஷ்மீரில் மறைமுக போரை தொடுக்க அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. பாகிஸ்தான் இராணுவமும் அதன் உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ யும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பினாமி போரை நடத்தி வருகின்றன.

பாகிஸ்தான் அரசு சதி

பாகிஸ்தான் அரசு சதி

பாகிஸ்தான் அரசோ சமூக ஊடகங்களின் மூலம் இந்தியாவிற்குள் உள்ள சமூக ஒற்றுமையை குலைக்கவும் வகுப்புவாத வன்முறையை தூண்டவும் தொடர்ந்து சதி செய்து வருகிறது. பாகிஸ்தானில் தற்போதைய பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்து வருவதன் காரணமாக நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) சாம்பல் பட்டியலில் இருந்து வெளியே வர இயலாத நிலையில் பாகிஸ்தான இருக்கிறது.

இந்தியா புரிந்து வைத்துள்ளது

இந்தியா புரிந்து வைத்துள்ளது

"வளர்ந்து வரும் மத மற்றும் இன அடிப்படைவாதம், உள் நாட்டு போராட்டங்கள் எதிர்காலத்தில் பாகிஸ்தான் நிலையை இன்னமும் மோசமாக்கும். வரும் ஆண்டுகளில், நமது பாதுகாப்புத் தொழில் அதிவேகமாக மேம்பட்டு வருவதை பார்க்க போகிறோம். இந்தியாவில் முழுமையாக தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் நமது பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும். பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பொருத்தவரை, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தந்திர யுக்தி சார்ந்த நாடுகளுடன் நட்புறவை வளர்ப்பதிலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவதையும் இந்தியா புரிந்து வைத்துள்ளது-

8வது முறையாக பேச்சு

8வது முறையாக பேச்சு

மே மாதத்தில் கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட மோதலைத் தீர்க்க இந்தியாவும் சீனாவும் ஏழு சுற்று இராணுவப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இந்நிலையில் 8வதுமுறையாக ராணுவ கமாண்டோக்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

English summary
Chief of Defence Staff General Bipin Rawat warned today that a "larger conflict" with China cannot be ruled out if border confrontations and unprovoked military actions spiraled. General Rawat also said China and Pakistan acting in collusion meant an omnipresent danger of regional instability with potential for escalation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X