டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய மிக்-21 போர் விமானம்.. பைலட் தப்பினார்.. நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய விமானப்படையின் (ஐ.ஏ.எஃப்) மிக் -21 போர் விமானம் செவ்வாய்க்கிழமை மாலை ராஜஸ்தானின் சூரத்கர் அருகே விபத்தில் சிக்கி நொறுங்கி விழுந்தது. அதிருஷ்டவசமாக பைலட் பாதுகாப்பாக பாரசூட்டில் தப்பி பிழைத்தார்.

தொழில்நுட்ப கோளாறுதான், விபத்துக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

A MiG-21 fighter jet of the Indian Air Force crashed

"மேற்கு செக்டாரில் ஒரு பயிற்சியின்போது, ​​மிக் -21 பைசன் விமானம் இன்று மாலை ஒரு பெரிய தொழில்நுட்பச் செயலிழப்பைச் சந்தித்தது. விமானி சுமார் 20.15 மணிநேரத்தில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். உயிர் இழப்பு ஏதும் இல்லை. நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்படும்" என்று இந்திய விமானப்படை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

English summary
A MiG-21 fighter jet of the Indian Air Force crashed near Suratgarh, Rajasthan today evening due to technical malfunction. The pilot managed to eject safely. A Court of Inquiry has been ordered to probe the accident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X