ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய மிக்-21 போர் விமானம்.. பைலட் தப்பினார்.. நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவு
டெல்லி: இந்திய விமானப்படையின் (ஐ.ஏ.எஃப்) மிக் -21 போர் விமானம் செவ்வாய்க்கிழமை மாலை ராஜஸ்தானின் சூரத்கர் அருகே விபத்தில் சிக்கி நொறுங்கி விழுந்தது. அதிருஷ்டவசமாக பைலட் பாதுகாப்பாக பாரசூட்டில் தப்பி பிழைத்தார்.
தொழில்நுட்ப கோளாறுதான், விபத்துக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

"மேற்கு செக்டாரில் ஒரு பயிற்சியின்போது, மிக் -21 பைசன் விமானம் இன்று மாலை ஒரு பெரிய தொழில்நுட்பச் செயலிழப்பைச் சந்தித்தது. விமானி சுமார் 20.15 மணிநேரத்தில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். உயிர் இழப்பு ஏதும் இல்லை. நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்படும்" என்று இந்திய விமானப்படை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.