டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பைப்புல பால் ஊத்தினா போதும் சர்ர்ர்னு கின்னத்துல போய் விழும்.. ராஜஸ்தான் பால் வியாபாரி புதுமை!

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜஸ்தானில் பால் வியாபாரி ஒருவர் தெருக்களில் மக்களுக்கு பால் விநியோகம் செய்யும் போது சமூக விலகலை கடைப்பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

    பைப்புல பால் ஊத்தினா போதும் சர்ர்ர்னு கின்னத்துல போய் விழும்.. ராஜஸ்தான் பால் வியாபாரி புதுமை!

    கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஒன்றரை மாதத்திற்கு மேலாக முழு முடக்கம் இந்தியாவில் அமலில் உள்ளது. இந்த முழு முடக்கத்தின் போது மக்கள் சமூக விலகலை கடைப்பிடித்து வருகிறார்கள்.

    அதாவது ஒருவருக்கும் இன்னொருவருக்கும் இடையே நெருக்கமாக இருக்காமல் 6 அடி வரை தள்ளியே நிற்பதுதான். காய்கறிக் கடைகள், மளிகை கடைகள், பால் பூத்துகள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று.. பால் தட்டுப்பாடு அபாயம் சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று.. பால் தட்டுப்பாடு அபாயம்

    இருமல்

    இருமல்

    உலக சுகாதார நிறுவனத்தை பொருத்தமட்டில் கொரோனா பாதித்தவர் தும்மினாலோ இருமினாலோ அதன் நீர்த் துளிகளில் இருந்து நோய் எளிதில் தொற்றிவிடும் என்பதால் 3 முதல் 6 அடி வரை தள்ளியே நிற்க வேண்டும் என்கிறது. நாம் கொரோனா பாதித்தவருடன் அருகருகே நிற்கும் போது அவரது தும்மல், இருமலில் இருக்கும் வைரஸை சுவாசிக்க நேரிடும் என்கிறது.

    தனித்தனி காட்சி

    தனித்தனி காட்சி

    இந்த நிலையில் கேரளா, தமிழகத்தில் ஒரு சில ரேஷன் கடைகளில் ஒரு பெரிய பைப் மூலம் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. இவ்வளவு ஏன் திருமணத்தில் கூட பெண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து நிற்காமல் தனித்தனியே நின்ற காட்சிகளும் நடந்துள்ளன.

    சுகாதாரத் துறை

    சுகாதாரத் துறை

    அது போல் ஒரு சம்பவத்தில் இரு கொம்புகள் மூலம் பெண்ணும் மாப்பிள்ளையும் மாலை மாற்றும் சம்பவங்களும் பார்த்தாகிவிட்டது. இந்த சமூக விலகல் இப்போது மட்டுமல்ல இனி எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் சுகாதாரத் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலாகும்.

    பைப் வழியாக

    பைப் வழியாக

    இந்த நிலையில் ராஜஸ்தானில் சஞ்சய் கோயல் எனும் பால் வியாபாரி ஒருவர் சமூக விலகலை கடைப்பிடித்து வரும் காட்சிகள் வைரலாகி வருகிறது. பால் டின்களுக்கும் வாடிக்கையாருக்கும் இடையே நீண்ட பைப் இருக்கிறது. இவர் தன் பக்கத்தில் இருந்து ஃபுன்னல் வழியாக பாலை ஊற்றுகிறார். அது அந்த பைப் வழியாக வாடிக்கையாளரின் பாத்திரத்தில் போய் விழுகிறது. அது மட்டுமல்ல அவர் முகத்தில் மாஸ்க் போட்டுக் கொண்டுள்ளார். இந்த பால் வியாபாரியின் சமூக அக்கறையை கண்டு மக்கள் பிரமித்து போய் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    English summary
    A Milk man from Rajasthan keeps social distancing while he serves milk to the customer. He was applaused in Social Media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X