• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆசை ஆசையா முதலிரவு அறைக்கு போன மணமகன்.. இப்போ ஆஸ்பத்திரியில் அட்மிட்.. விளாசி தள்ளிய மனைவி எஸ்கேப்

|

டெல்லி: கல்யாணம் முடிந்த கையோடு ஆசைஆசையாக முதலிரவு அறைக்குள் சென்றுள்ளார் ஒரு மணமகன்.. ஆனால் அவருக்காகக் காத்திருந்தது பெரிய அதிர்ச்சி.

உத்தரப்பிரதேச மாநிலம் முழுக்க பரபரப்பாக பேசப்படுகிறது இந்த சம்பவம். அது என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்.

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு.. ஆனால் இதுதான் முதல் இரவு.. என்று திருமணநாள் இரவுக்கு தனியாக பாட்டு எழுதி ரசித்த மக்கள் நமது மக்கள்.

திருமணம்

திருமணம்

இப்படியான கனவில்தான் இருந்தார் உத்தரப்பிரதேச மாநிலம் ஹரித்துவார் பகுதியை சேர்ந்த அந்த இளம் வயது வாலிபர். இவருக்கும் பிஜ்னோர் மாவட்டம் குருட் என்ற கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் மார்ச் 15ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதுவும், உற்றார் உறவினர் சூழ ஒரு கோவிலில் வைத்து, நல்லபடியாகத்தான், இவர்கள் திருமணம் நடந்துள்ளது.

புரோக்கர் சிபாரிசு

புரோக்கர் சிபாரிசு

இந்த பெண்ணுக்கும், மணமகன் குடும்பத்துக்கும் நேரடிப் பழக்கம் கிடையாதாம். கல்யாண புரோக்கர் ஒருவர் சொல்ல, அதன் மூலமாக செட்டாகி உள்ளது இந்த திருமணம். ஆனால் இதுதான் பிறகு ஆபத்தாக மாறப்போகிறது என்பதை மணமகன் வீட்டார் அப்போது புரிந்திருக்கவில்லை.

முதலிரவு அறை

முதலிரவு அறை

மணமகளை தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் அந்த வாலிபர் . ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியோடு பல்வேறு சடங்குகளை செய்து மணமக்களை வீட்டுக்குள் வரவேற்றது. இரவு உறவினர்கள் அனைவருக்கும் விருந்து, உபசாரம் என கல்யாண வீடு தடபுடலாக இருந்தது. வந்திருந்த உறவினர்கள் பெரும்பாலானோரை வழியனுப்பி வைத்துவிட்டு இரவு ஆசையோடு முதலிரவு அறைக்குள் சென்றார் மணமகள்.

இரும்பு கம்பியால் அடி

இரும்பு கம்பியால் அடி

ஆனால் திடீரென மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சரமாரியாக மணமகனை அடி துவம்சம் செய்து விட்டார் மணமகள். "ஐயோ, அம்மா.." என்று மணமகன் கத்த , வெளியே இருந்த குடும்பத்தினருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அப்புறமாக கதவைத் திறந்து சென்று பார்த்தபோது, வலி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து கிடந்தார் மணமகன்.

நகை, பணம்

நகை, பணம்

அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு ஓடி உள்ளனர். இந்த இடைவெளியில் 20 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் மணமகள் ஓட்டம் பிடித்து விட்டார். ஒருபக்கம் இரும்பு கம்பியால் அடி, இன்னொரு பக்கம் வீட்டில் இருந்த பணம் கொள்ளை என .. இப்படி இரட்டை சிக்கலில் தவித்து வருகிறது மணமகன் குடும்பம் . இதுபற்றி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் அந்த மணமகளை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தகவல் தற்போது தான் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

English summary
A newly wed bride thrashes groom with iron rod on first night of wedding and ran away with 20,000 cash and jewellery worth 200000.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X