டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.. கேரளாவை சேர்ந்த அமைப்பு அதிரடி!

முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

மூன்று நாட்களுக்கு முன் ராஜ்யசபாவில் முத்தலாக் தடை சட்ட மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

A petition has been filed in the Supreme Court challenging Triple Talaq bill

இந்த சட்டம் மூலம் குற்றம் நிருபிக்கப்பட்ட ஆண் 3 ஆண்டு சிறையில் அடைக்கப்படுவார். இந்த முத்தலாக் தடை சட்டம் மூலம் மனைவி தனது கணவன் மீது புகார் கொடுக்கலாம்.

திடீர் திருப்பம்.. உன்னாவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைப்பு! திடீர் திருப்பம்.. உன்னாவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைப்பு!

இந்த மசோதா குடியரசுத் தலைவர் ராம்நாத் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் முத்தலாக் தடை சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்ததுள்ளது.

இந்த நிலையில் முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பான சமஸ்தா கேரள ஜாமியதுல் உலேமா என்ற அமைப்பு சார்பாக வழக்கு தொடுத்துள்ளது.

இந்த சட்டம் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக இருக்கிறது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் ஏற்கனேவே முத்தலாக்கை தவறு என்று கூறிய பின் இந்த சட்டம் தேவையில்லாதது. மேலும் இந்த சட்டம் இந்திய சட்டப்பிரிவு 14, 15 மற்றும் 21க்கு எதிராக இருக்கிறது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த முத்தலாக் மசோதாவிற்கு இஸ்லாமிய அமைப்புகள், எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், தற்போது வழக்கும் தொடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A petition has been filed in the Supreme Court challenging the Muslim Women (Protection of Rights on Marriage) Act, 2019 which criminalises Triple Talaq.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X