டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடந்து சோர்ந்த குழந்தை.. சூட்கேஸில் தூங்கியபடி.. இழுத்துச் சென்ற தாய்.. இறைவா ஏன் இந்த கொடுமை!

Google Oneindia Tamil News

டெல்லி: பஞ்சாப்பிலிருந்து ஜான்சிக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்லும்போது தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அவரது தாய் டிராலி சூட்கேஸில் வைத்து இழுத்து செல்லும் காட்சி மனதை உலுக்கியது.

Recommended Video

    Migrant Kid Sleeping On Mother's Suitcase

    நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் இருக்கும் நிலையில் பணமும் வேலையும் இல்லாததால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்கிறார்கள். இப்படி அவசர அவசரமாக செல்லும் போது விபத்துகளில் சிக்கி இறக்கிறார்கள்.

    அது போல் ஊர்களுக்கு செல்லும்போது சொல்லொண்ணா துயரில் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் பஞ்சாப்பில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆக்ரா வழியாக ஜான்சிக்கு கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

    2019ல் கூட பூமிக்கு வந்தது.. பென்டகன் வெளியிட்ட 2019ல் கூட பூமிக்கு வந்தது.. பென்டகன் வெளியிட்ட "யுஎஃப்ஓ" வீடியோ குறித்த புது தகவல்கள்.. ஏலியன்களா?

    டிராலி பெட்டி

    டிராலி பெட்டி

    சுமார் 800 கி.மீ. தூரம் நடந்தே செல்லும் இவர்களில் ஒரு தாய் தனது குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றார். பின்னர் நீண்ட தூரம் தூக்கிச் செல்ல முடியாததால் குழந்தையை நடத்தியே கூட்டிச் சென்றார். அவரது உடமைகளை ஒரு டிராலி பெட்டியில் வைத்து இழுத்துக் கொண்டு சென்றார்.

    மனம்

    மனம்

    அப்போது குழந்தை நடந்து நடந்து சோர்ந்து விட்டது. இதனால் அந்த குழந்தைக்கு தூக்கம் வந்து டிராலி மேலேயே படுத்துக் கொண்டது. அவரது தாய் அந்த பெட்டியில் படுத்திருந்த குழந்தையை இழுத்தபடியே சென்றுக் கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் போது மனம் வலிக்கிறது.

    கிராமத்தினர்

    கிராமத்தினர்

    இத்தனை அவசர அவசரமாக லாக்டவுனை அறிவித்து இப்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவதியடைவதும் இறப்பதும் அன்றாட தொடர் கதையாகிவிட்டது. அதுபோல் பாலசோரில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு 30 வயது புலம்பெயர்ந்த தொழிலாளி வந்தார். அவரை அந்த கிராமத்திற்குள் சேர்க்க கிராமத்தினர் மறுத்துவிட்டார்கள்.

    பணத்தேவை

    பணத்தேவை

    இதனால் அவர் வேறு வழியில்லாமல் பராமரிப்பு இல்லாத கழிவறையில் 3 தினங்களாக தங்கி அங்கேயே உணவருந்தும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது. அது போல் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராகுல் என்ற தினக்கூலி தொழிலாளி தன்னிடம் இருந்த மாட்டு வண்டியில் ஒரு மாட்டை பணத்தேவைக்காக விற்றுவிட்டார்.

    காட்சி

    பின்னர் அந்த பணமும் செலவாகிவிட்டதால் தற்போது சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன் மாட்டு வண்டியில் செல்ல முடிவு செய்தார். ஆனால் கொளுத்தும் வெப்பத்தை கருத்தில் கொண்டு தனது குடும்பத்தினரை மாட்டு வண்டியில் அமர வைத்துவிட்டு இரு மாடுகள் இழுக்கும் இடத்தில் ஒரு மாட்டை விற்றுவிட்டதால் அந்த பகுதியை தனது கழுத்தில் போட்டு கொண்டு இழுத்து செல்லும் காட்சிகளும் மனதை வாட்டி வதைக்கின்றன.

    English summary
    Little boy fell asleep in a suitcase after exhausted with all the walking which his mother dragged the suitcase from Punjab to Jhansi over 800 km.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X