டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.. டெல்லி கிளம்பும் முன்பு மோடி நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    சீன அதிபரிடம் தமிழில் பேசிய மோடி.. சென்னை கனக்ட் குறித்து பெருமிதம்!-வீடியோ

    டெல்லி: சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான முறைசாரா சந்திப்பை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி கிளம்பிச் சென்றார். முன்னதாக, அவர் தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார். சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருப்பதாக தமிழக அரசுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    சீன அதிபர் ஜி ஜின்பிங் வெள்ளிக்கிழமையான நேற்று மாமல்லபுரம் வருகை தந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து முறைசாரா உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இன்று நண்பகலில் ஜி ஜின்பிங் நேபாளம் புறப்பட்டு சென்றார். அதை தொடர்ந்து மோடி டெல்லி திரும்பினார்.

    A special Thank You to my sisters and brothers of Tamil Nadu: Narendra Modi

    முன்னதாக அவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டுவிட் செய்திருந்தார். அதை பாருங்கள்:

    நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். #ChennaiConnect இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்.

    தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.

    மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கும் நன்றி.

    அழகிய மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய- சீன முறை சாரா உச்சி மாநாட்டிற்கு உறுதுணை புரிந்து உபசரிப்பு நல்கிய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக கலாச்சார அமைப்புகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    English summary
    A special Thank You to my sisters and brothers of Tamil Nadu. As always, their warmth and hospitality was outstanding. It’s always a delight to be among the people of this dynamic state. I also thank the Government of TN for their efforts in organising the Summit in Mamallapuram, says Narendra Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X