டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தடுப்பூசிக்கு பிந்தைய பக்கவிளைவுகளுக்கு.. கவலை மிக முக்கிய காரணமாம்.. ஆய்வு அடித்து சொல்கிறது!

Google Oneindia Tamil News

டெல்லி: தடுப்பூசிக்கு பிந்தைய 30% க்கும் அதிகமான பக்கவிளைவுகளுக்கு கவலை ஒரு முக்கிய காரணம் என்று தேசிய நோய்த்தடுப்பு குழு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.கொரோனாவை தடுப்பதில் தடுப்பூசி மட்டும் தான் பேராயுதம் எனபதால் பல்வேறு நாட்டு மக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

Recommended Video

    Corona Vaccine தொடர்பான சந்தேகங்கள் | Doctor Dilipan விளக்கம்

    இந்தியாவில் ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கு மக்கள் மிகவும் தயக்கம் காட்டி வந்தனர்.ஆனால் தற்போது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற பிரதான தடுப்பூசி பெரும்பாலான மக்களுக்கு செலுத்தப்படுகிறது.

    பாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு புகழாரம்- என்.ஐ.ஏ. ஆட்சேபனையால் வாபஸ் பெற்றார் மும்பை நீதிபதி ஷிண்டே பாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு புகழாரம்- என்.ஐ.ஏ. ஆட்சேபனையால் வாபஸ் பெற்றார் மும்பை நீதிபதி ஷிண்டே

    பக்கவிளைவுகள்

    பக்கவிளைவுகள்

    தடுப்பூசி போட்ட பிறகு பெரும்பாலானவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. தடுப்பூசி போடப்பட்ட பின்னர் ஒரு நபருக்கு ஏற்படும் எதிர்பாராத மருத்துவப் பிரச்னைகளைத் தான் பக்க விளைவு என்று அழைக்கிறோம். பக்க விளைவுகளுக்கு தடுப்பு மருந்தின் காரணமாகவும் இருக்கலாம். தடுப்பூசி செயல்முறை அல்லது வேறு ஏதேனும் காரணமாகவும் இருக்கலாம்.

    ஆய்வு நடத்தியது

    ஆய்வு நடத்தியது

    ஒரு டோஸ் எடுத்து கொண்டவர்களுக்கும், இரண்டு டோஸ் எடுத்து கொண்டவர்களுக்கும் பக்க விளைவுகள் ஏற்படலாம். ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் வீக்கம், மிதமான காய்ச்சல், உடல் வலி, பதற்றம், ஒவ்வாமை, அரிப்பு ஆகியவை பக்க விளைவுகளாக வெளிப்படலாம். இந்த நிலையில் தடுப்பூசிக்கு பிறகு ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து தேசிய நோய்த்தடுப்பு குழு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

    கவலை முக்கிய காரணம்

    கவலை முக்கிய காரணம்

    அப்போது தடுப்பூசிக்கு பிந்தைய 30% க்கும் அதிகமான பக்கவிளைவுகளுக்கு கவலை ஒரு முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 88 பக்க விளைவுகளில் 61 தடுப்பூசிக்கு தொடர்ச்சியாக காரணம் இருக்கிறது என்றும் 37 தடுப்பூசி தயாரிப்பு தொடர்பாக ஏற்பட்டது என்றும் 22 கவலை தொடர்பாக எற்பட்ட பக்கவிளைவுகள் என்றும் 2 தடுப்பூசி செல்லுவதில் ஏற்பட்ட பிழை தொடர்பாக ஏற்பட்டது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ஊசிகளின் பயம்

    ஊசிகளின் பயம்

    ஊசிகளின் பயம் காரணமாக தடுப்பூசி எடுப்பதில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக கவலை இருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. கோவாக்சினை விட, கோவிஷீல்டு எடுத்துக் கொண்டவர்களுக்கு அதிக பக்கவிளைவுகள் பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றன என்று தேசிய நோய்த்தடுப்பு குழு ஆய்வு தெரிவிக்கிறது.

     மனநல மருத்துவர் சொல்வது என்ன?

    மனநல மருத்துவர் சொல்வது என்ன?

    இது தொடர்பாக மனநல மருத்துவருமான டாக்டர் ஜிதேந்தர் நாக்பால் கூறுகையில், கவலை என்பது தடுப்பூசிக்கு பிந்தைய கடுமையான பக்கவிளைவுகளுக்கான காரணங்கள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல. தடுப்பூசிகள் புதியவை மற்றும் அவற்றைப் பற்றி போதுமான பக்க விளைவுகள் தெரியவில்லை என்பதால், அதன் விளைவைப் பற்றி கவலைப்படுவதும் மறுபரிசீலனை செய்வதும் இயற்கையானது. இது தவிர தடுப்பூசி தொடர்பான வதந்திகளும் மக்களிடம் கவலையைத் தூண்டுகின்றன என்று தெரிவித்தார்.

    English summary
    A study by the National Immunization Committee found that anxiety is a major cause for more than 30% of post-vaccine side effects
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X