டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

12 ஆண்டுகளாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2ஜி வழக்கு... மீண்டும் விஸ்வரூபம்!

Google Oneindia Tamil News

டெல்லி; 12 ஆண்டுகளாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுதலை செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு .... இதுவரை நடந்தது என்ன?

2007-ம் ஆண்டு மே: மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக திமுகவின் ஆ.ராசா பதவியேற்றார்.

நவ. 2- 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையஇ கடைபிடிக்க வேண்டும் என ஆ. ராசாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதினார்.

A Timeline of Major Events in 2G Spectrum Case

2008-ம் ஆண்டு ஜன.10: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை பெற 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்கிற நடைமுறை கடைபிடிக்கப்பட்டது. இதனடிப்படையில் ஸ்வான் டெலிகாம், யூனிடெக், டாடா டெலி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் அல்லைக்கற்றை ஒதுக்கீடு கிடைத்தன. இதை எடிசாலட், டெலிநார் மற்றும் டோகோமோவுக்கு அதிக விலைக்கு விற்றன அந்த நிறுவனங்கள்.

2009-ம் ஆண்டு மே- 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றது என மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்துக்கு புகார் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இப்புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து தொலைத் தொடர்பு துறை அதிகாரிகள், நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. அத்துட்டன் அந்த நிறுவன அலுவலகங்களிலும் சோதனைகள் நடைபெற்றன.

2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப் பெரும் முறைகேடு நடைபெற்றது எனவும் இதனால் அரசுக்கு ரூ1.76 லட்சம் கோடி நட்டம் என்றும் மத்திய கணக்கு தணிக்கை துறை அதிகாரியாக இருந்த வினோத் ராய் அறிக்கை தாக்கல் செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 2ஜி வழக்கு தொடர்பான ஆடியோ உரையாடல்கள் ஏராளமாக வெளிவந்தன.

இதனையடுத்து தமது மத்திய அமைச்சர் பதவியை ஆ. ராசா ராஜினாமா செய்தார். மேலும் சிபிஐ அவரை தொடர்ந்து விசாரித்து வந்தது.

2ஜி: ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க கோரி சிபிஐ மனு 2ஜி: ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க கோரி சிபிஐ மனு

2011 பிப்ரவரி - ஆ. ராசா கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

மே 20: கருணாநிதி மகள் கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதி ஓபி ஷைனி இவ்வழக்கை விசாரித்தார்.

நவ. 28; கனிமொழி உள்ளிட்டோர் ஜாமீனில் விடுதலையாகினர். ஆனால் ஆ. ராசா தொடர்ந்து சிறையில் இருப்பதாக கூறினார்.

2012 பிப்.: மத்திய அமைச்சராக்க ஆ.ராசா பதவி வகித்த காலத்தில் அனுமதி கொடுக்கப்பட்ட 122 நிறுவனங்களின் உரிமங்களை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது.

இவ்வழக்கில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வரை சுப்பிரமணியன் சுவாமி சென்றார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மே 12- டெல்லி திஹார் சிறையில் இருந்து ஆ.ராசா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

2013 டிச, 9 - லோக்சபாவில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை தாக்கல் செய்தது.

2014 ஏப் 25 - ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

2015 நவ. 3 - தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரிய உச்சநீதிமன்றத்தில் கனிமொழி தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.

2017 ஏப்.19; டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் தீர்ப்பு தேதிகள் மாற்றி மாற்றி அமைக்கப்பட்டன.

2017 டிச 21: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார் நீதிபதி ஓபி ஷைனி.

2018: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி ஓராண்டுக்கும் பின்னரே அமலாக்கத்துறை, சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அனைவரது விடுதலைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது இம்மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் ஜூலை 30-ந் தேதி விசாரணை நடைபெற இருந்தது.

2019 மே 31- தமது மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

English summary
A Timeline of Major events in 2G Spectrum Case from 2012.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X