டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லியில் தனியாக சிக்கிய போலீசாரை சூழ்ந்து தாக்கிய வக்கீல்கள்.. வைரலாகும் வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    போலீஸை வக்கீல்கள் தாக்கும் வீடியோ!

    டெல்லி: டெல்லியில் பாதுகாப்பு கோரி போலீஸார் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஒரு போலீஸ்காரரை வழக்கறிஞர்கள் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.டெல்லியில் போலீசார் நடத்தும் போராட்டத்திற்கு இந்த தாக்குதல் சம்பவமும் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லியில் தீஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் கடந்த 2-ஆம் தேதி வாகன நிறுத்துமிடத்தில் போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

    A video shows how our police is treated

    இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டதில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். இரு தரப்பினரும் வாகனங்களுக்கு தீ வைத்துக் கொண்டதில் போலீஸார் வாகனங்களும் வழக்கறிஞர்களின் கார்கள் எரிந்தன.

    இந்த நிலையில் பாதுகாப்பு கோரி நேற்றைய தினம் உச்சநீதிமன்றம் நோக்கி வழக்கறிஞர்கள் பேரணி சென்றனர். இன்றைய தினம் டெல்லியில் உள்ள போலீஸார் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராடும் டெல்லி போலீசாருக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் ஆதரவு.. தீவிரமாகும் விவகாரம்போராடும் டெல்லி போலீசாருக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் ஆதரவு.. தீவிரமாகும் விவகாரம்

    அதில் நீதி வேண்டும் என்றும் பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் இரு சக்கர வாகனத்தில் வரும் ஒரு போலீஸ்காரரை 3 வக்கீல்கள் ரவுண்ட் கட்டி கொண்டு வாக்கு வாதம் செய்கின்றனர்.அதில் ஒருவர் அந்த போலீஸை கடுமையாக தாக்கியதில் அவர் பைக்கில் திரும்பி சென்றுவிட்டார்.

    நேற்று மதியம் இந்த சம்பவம் நடந்துள்ளது.இதில் தாக்குதலுக்கு உள்ளாகும் போலீசார் பெயர் கரண் யாதவ் என்று தெரிய வந்துள்ளது. நேற்று டெல்லியில் வழக்கறிஞர்கள் பலர் இதுபோல் வன்முறையில் ஈடுப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்கள் சிலரும் நேற்று தாக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று போலீஸ் கரண் யாதவ் தாக்கப்பட்டது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.டெல்லியில் போலீசார் நடத்தும் போராட்டத்திற்கு இந்த தாக்குதல் சம்பவமும் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தாக்குதல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து வழக்கறிஞர்களுக்கு சகிப்புத்தன்மை என்பதே இல்லாமல் போய்விட்டதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

    English summary
    A video shows that how our police force is being treated. There is no tolerance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X