டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இப்படி மாஸ்க் போட்றதும் ஒன்னு.. 1234-னு பாஸ்வேர்டு வக்கறதும் ஒன்னு.. ஆபத்தை விவரித்த ஐஏஎஸ் அதிகாரி

Google Oneindia Tamil News

டெல்லி: நெட்டினாலான (வலை) மாஸ்க்கை ஒரு பெண் போட்டுள்ளதை ஐஏஎஸ் அதிகாரி பொட்டில் அடித்தாற் போல அதன் ஆபத்துகளை தனது ட்விட்டரில் விளக்கியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் நாளுக்கு நாள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனாவை எதிர்த்து உலக நாடுகள் போராடி வருகின்றன. சில நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் கூறுவது ஒன்றுதான். அதாவது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை மாஸ்க் அணிந்து கொண்டிருப்பது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி கழுவுவது ஆகியவைதான் சிறந்த வழி என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

ஆட்சிகள் கவிழ்ப்பு...மெழுகுவர்த்தி ஏந்தியது...இவைதான் மோடி சாதனைகள்...ராகுல் காந்தி!! ஆட்சிகள் கவிழ்ப்பு...மெழுகுவர்த்தி ஏந்தியது...இவைதான் மோடி சாதனைகள்...ராகுல் காந்தி!!

மாஸ்க்

மாஸ்க்

அதிலும் மாஸ்க்களை மூக்கு, வாய் பகுதி நன்கு மூடும்படி அணிய வேண்டும் என்பதே மருத்துவ நிபுணர்களின் அறிவுரையாகும். அதாவது மாஸ்க்கை லூசாக அணியக் கூடாது. அதிலும் வலை போன்ற துணிகளால் செய்யப்பட்ட மாஸ்க்குகளை அணியவே கூடாது. அவ்வாறு அணிவது மாஸ்க் அணிவதின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது.

நேர்த்தி

நேர்த்தி

இந்த நிலையில் வெளிநாட்டில் வாழும் பெண் ஒருவர் வலையினாலான மாஸ்க்கை அணிந்து கொண்டிருந்தார். அந்த புகைப்படத்தை ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் ஜெயின் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த மாஸ்க்கை வைத்து அவர் சைபர் பாதுகாப்பு குறித்த கிளாஸ்ஸையே எடுத்துவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு அத்தனை நேர்த்தியாக விளக்கியுள்ளார்.

மாஸ்க்

மாஸ்க்

வலையினாலான மாஸ்கை போடுவதும் 1234 என பாஸ்வேர்டு வைப்பதும் ஒன்றுதான் என குறிப்பிட்டுள்ளார். அதாவது இன்று சமூகவலைதளங்கள், ஈமெயில், ஆன்லைன் வங்கிக் கணக்குகளுக்கும் நாம் யூசர் நேம், பாஸ்வேர்டு கொடுப்போம். பொதுவாக சைபர் கிரைம் துறையும், வங்கிகளும் அறிவிப்பது மிகவும் ஸ்டிராங்கான பாஸ்வேர்டுகளை கொடுக்க வேண்டும் என்பதுதான்.

கணக்கு

கணக்கு

அதாவது மற்றவர்களால் யூகிக்கவே முடியாத அளவுக்கு எண்கள், சிறப்பு குறியீடுகள், ஆங்கில எழுத்துக்கள் என கலந்து கொடுக்க வேண்டும். ஒரு வேளை யாராவது 1234 என பாஸ்வேர்டு கொடுத்தால் என்னவாகும், ஹேக்கர்கள், மோசடி பேர்வழிகள் எளிதாக பாஸ்வேர்டை போட்டு உங்கள் கணக்குகளில் குழப்பம் செய்துவிட்டு ஆபத்தை ஏற்படுத்துவர்.

ஐபிஎஸ் அதிகாரி

ஐபிஎஸ் அதிகாரி

அது போல்தான் கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்பதால்தான் நாம் சுவாசிக்கும் மூக்கு, வாய் பகுதியை மூடுமாறு கூறுகிறார்கள். ஆனால் காற்று நுழையும்படி நெட் மாஸ்க் போட்டால் எப்படி? இதுதான் அந்த ஐபிஎஸ் அதிகாரியின் உவமையாகும்.

English summary
A woman wearing a net mask and IPs officer shares some important message about Cyber threat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X