டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'முதல் முறையாக தலித் முதல்வர்.. அதை தாங்கிக்கொள்ள முடியாமல் சித்து ராஜினாமா..' விளாசும் ஆம் ஆத்மி

Google Oneindia Tamil News

டெல்லி: பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ள நிலையில், மாநிலத்தில் முதல்வராகத் தலித் ஒருவர் இருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமலேயே சித்து ராஜினாமா செய்துள்ளதாக ஆம் ஆத்மி சாடியுள்ளது.

Recommended Video

    பதவியேற்ற இரண்டே மாதத்தில் ராஜினாமா செய்த சித்து ... பஞ்சாப் காங்கிரஸில் மீண்டும் குழப்பம்!

    பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு இப்போது மிகப் பெரியளவில் உள்கட்சி மோதல் வெடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருந்தாலும்கூட பஞ்சாப் அரசியல் களத்தில் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

    கருகலைக்க நாட்டு மருந்து.. 3 மாதமாக இறந்தே கிடந்த சிசு.. கர்ப்பப்பையில் சீழ்.. ஒடிஸா கர்ப்பிணி பலி கருகலைக்க நாட்டு மருந்து.. 3 மாதமாக இறந்தே கிடந்த சிசு.. கர்ப்பப்பையில் சீழ்.. ஒடிஸா கர்ப்பிணி பலி

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர் சிங் விலகினார். சரண்ஜித் சிங் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

    ராஜினாமா

    ராஜினாமா

    நவ்ஜோத் சிங் சித்து கொடுத்த அழுத்தம் காரணமாகவே அமரீந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாகச் சோனியா காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சி, எதிர்காலம் ஆகியவற்றில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் தாம் தலைவர் பதவியில் இருந்து விலகினாலும் காங்கிரஸுக்காக பணியாற்றுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் தான், அமரீந்தர் சிங்கின் எதிர்ப்பை தாண்டி பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஆம் ஆத்மி தாக்கு

    ஆம் ஆத்மி தாக்கு

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராகத் தலித் ஒருவர் இருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமலேயே சித்து ராஜினாமா செய்துள்ளதாகப் பஞ்சாபில் எதிர்க்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி சாடியுள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "நவ்ஜோத் சிங் சித்து தலித்துகளுக்கு எதிரானவர் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. முதல்முறையாக இங்கு எளிய குடும்ப பின்னணியைக் கொண்ட ஒருவர் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இதை சித்துவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இது மிகவும் வருத்தமான செயல்" என்றார்.

    முதல்வர்

    முதல்வர்

    பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக சரண்ஜித் சிங் பஞ்சாப் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாபில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் பொறுப்பிற்கு வந்துள்ளது இதுவே முதல்முறையாகும். அங்குள்ள மக்கள்தொகையில் மொத்தம் சுமார் 33% பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும். அடுத்தாண்டு அங்குச் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், தலித் ஒருவர் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளது ஒரு முக்கியமான நடவடிக்கை என்றும் இது காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

    கிளம்பும் புது புது வியூகங்கள்

    கிளம்பும் புது புது வியூகங்கள்

    அதேநேரம் நவ்ஜோத் சிங் சித்து கொடுத்த அழுத்தம் காரணமாகத் தன்னை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியதால் கடும் மூத்த தலைவர் அமரீந்தர் சிங் கடும் அதிருப்தியில் உள்ளார். இவர் 2 நாள் பயணமாக இன்று டெல்லி சென்றுள்ளார். அமரீந்தர் சிங் பாஜகவில் இணையலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதைத் தடுக்கவே நவ்ஜோத் சிங் சித்துவை ராஜினாமா செய்யச் சொல்லி காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் தேர்தலுக்கு முன்பு உள்கட்சி குழப்பம் எல்லாம் சீரானால் மட்டுமே காங்கிரஸால் வெற்றி பெற முடியும் என்று அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

    English summary
    Aam Aadmi Party Navjot Singh Sidhu quit from his post as he "could not bear" a Dalit as the Chief Minister. latest news on Punjab crisis.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X