டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எம்.பி. சீட்டுக்கு ரூ.6 கோடி லஞ்சம்.. கேஜ்ரிவாலுக்கு எதிராக ஆம் ஆத்மி வேட்பாளர் மகன் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலில் போட்டியிட அரவிந்த் கேஜரிவாலுக்கு எனது தந்தை ரூ 6 கோடியை லஞ்சமாக கொடுத்தே மேற்கு டெல்லி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றதாக அவரது மகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. அதன்படி 5 கட்டங்கள் முடிந்து விட்டது. 6-ஆம் கட்டமாக டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.

மொத்தமுள்ள 7 தொகுதிகளில் டெல்லி மேற்கு தொகுதியின் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பல்பீர் சிங் ஜேகார் போட்டியிடுகிறார்.

"பொய்யர்களின் தலைவர் மோடி!" ... காங்கிரஸ் தலைவர் சித்து கடும் விமர்சனம்!

அரசியல்

அரசியல்

இந்தநிலையில் பல்பீரின் மகன் உதய் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில் 3 மாதங்களுக்கு முன்னர்தான் எனது தந்தை அரசியலில் நுழைந்தார்.

வீடியோ

அவர் மேற்கு டெல்லியில் போட்டியிட ரூ, 6 கோடி பணத்தை லஞ்சமாக கேஜரிவாலுக்கு கொடுத்தார். இது போல் சீட் பெறுவதற்காக எனது தந்தை கேஜரிவாலுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக என்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

எனது தந்தை 3 மாதங்களுக்கு முன்னர்தான் ஆம் ஆத்மியில் சேர்ந்தார். அண்ணா ஹசாரே இயக்கத்திலும் அவர் இருந்திருக்கவில்லை. கட்சியில் மூத்த தலைவர்கள் , நீண்ட கால தொண்டர்கள் இருக்கும் பட்சத்தில் எனது தந்தைக்கு ஏன் அக்கட்சி போட்டியிட வாய்ப்பு கொடுத்தது? என்று கேள்வி எழுப்பினார்.

பரபரப்பு குற்றச்சாட்டு

பரபரப்பு குற்றச்சாட்டு

இதிலிருந்து பணம் கொடுத்தால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்ற கொள்கையை கேஜரிவால் பின்பற்றுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. நாளை தேர்தல் நடைபெறும் நிலையில் அதிலும் டெல்லியில் 7 மக்களவை தொகுதிகளில் மெஜாரிட்டியாக வெற்றி பெறும் கட்சியே மத்தியை ஆளும் நிலை உள்ளதாக நம்பப்படும் நிலையில் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Aam Admi party leader Balbir singh Jakhar's son says that his father paid Aravind Kejriwal to get ticket in West Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X