டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கம்பீர் செய்த வேலையை பாருங்கள்.. பிரஸ் மீட்டில் கண்ணீர் விட்டு கதறிய ஆம் ஆத்மி பெண் வேட்பாளர்

Google Oneindia Tamil News

Recommended Video

    கம்பீர் ஆதரவாளர்கள் செய்த பிரச்சாரம்.. கண்ணீர் விட்ட ஆம் ஆத்மி பெண் வேட்பாளர்- வீடியோ

    டெல்லி: பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் தன்னை மட்டரகமாக விமர்சனம் செய்து துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி பெண் வேட்பாளர், அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

    லோக்சபா தேர்தலில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அன்று டெல்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் களமிறக்கப்பட்டுள்ளார். அவரது முக்கிய போட்டியாளராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி களமிறக்கப்பட்டுள்ளார்.

    இதனிடையே டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து திடுக்கிடும் தகவல் ஒன்றை அதிஷி வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், கௌதம் கம்பீர் கிரிக்கெட் மைதானத்தில் எதிரணி வீரர்களின் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்சருக்கும், விளாசிய போது மிகவும் ரசித்து உற்சாகமடைந்த, இந்த நாட்டு மக்களில் நானும் ஒருவர்.

    மோடி.. நிதின் கட்கரி யாரும் வேண்டாம்.. மெஜாரிட்டி இல்லையெனில் இவர்தான் பிரதமர்.. பாஜக திட்டம்! மோடி.. நிதின் கட்கரி யாரும் வேண்டாம்.. மெஜாரிட்டி இல்லையெனில் இவர்தான் பிரதமர்.. பாஜக திட்டம்!

    தரக்குறைவாக விமர்சனம்

    தரக்குறைவாக விமர்சனம்

    ஆனால், அரசியல்வாதியாக கௌதம் கம்பீரின் செயல்பாடு மிகவும் மட்டமாக உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எந்த அளவுக்கும் கீழே இறங்கி செல்வதற்கு அவர் தயாராகிவிட்டார். பெண் என்றும் பாராமல் என்னை பற்றி மிகவும் மோசமான வார்த்தைகளில் விமர்சனம் செய்து துண்டு பிரசுரங்களை கம்பீர் சார்பில் தொகுதியில் வினியோகித்து வருகின்றனர்.

    அழுத பெண் வேட்பாளர்

    அழுத பெண் வேட்பாளர்

    இவ்வாறு அதிஷி பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென உடைந்து அழுதுவிட்டார். அவரை அருகில் இருந்த ஆம் ஆத்மி நிர்வாகிகள் தேற்றினர். ஆம் ஆத்மி வேட்பாளர், குறிப்பிட்ட அந்த துண்டு பிரசுரத்தில் ஜாதி ரீதியான தாக்குதலும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் சுட்டிக்காட்டிய அந்த துண்டு பிரசுரத்தில், செய்தியில் பிரசுரிக்க முடியாத அளவுக்கு மிக மோசமான வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. பிறப்பின் மூலம் குறித்தெல்லாம் கடுமையான விமர்சனம் வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

    கெஜ்ரிவால் ஆதரவு

    இதனிடையே ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்வீட்டில், கௌதம் கம்பீர் இந்த அளவுக்கு கீழ்த்தரமாக இறங்குவார் என்று நாங்கள் கற்பனை செய்து பார்க்கவில்லை. இது போன்ற மனநிலையில் உள்ளவர்கள் வாக்களித்து தேர்வு செய்யப்பட்டால், பெண்களின் பாதுகாப்பு என்ன ஆகும்? அதிஷி நீங்கள் வலிமையாக இருக்கவும். உங்களுக்கு இது எவ்வளவு கடினமான சூழ்நிலை என்பதை என்னால் உணர முடிகிறது. இது போன்ற சக்திகளை தான் நாம் எதிர்த்து போரிட வேண்டியுள்ளது, என்று தெரிவித்துள்ளார்.

    கம்பீர் மறுப்பு

    கம்பீர் மறுப்பு

    அதே நேரம் டிவி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இந்த குற்றச்சாட்டை கவுதம் கம்பீர் மறுத்துள்ளார். தோல்வி பயத்தால் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக கம்பீர் விளக்கம் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    "BJP candidate Gautam Gambhir circulated derogatory pamphlet about me, in East Delhi constituency. Language in this pamphlet is so abusive and low that everybody will feel ashamed while reading it" says AAP candidate Atishi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X