டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி சுனாமியில் சிக்கிய ஆம் ஆத்மி... ஒரே ஒரு தொகுதியை கைப்பற்றி ஆறுதல்!!

Google Oneindia Tamil News

சங்ரூர்: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கும் பெரிய அடி விழுந்துள்ளது. டெல்லியில் அந்த கட்சி ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. மொத்தமுள்ள 7 தொகுதிகளிலுமே பாஜகதான் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஒரு தொகுதியை அர்விந்த் கேஜ்ரிவால் கட்சி கைப்பற்றி ஆறுதல் அடைந்துள்ளது. அங்குள்ள சங்ரூர் மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட பக்வந்த் மான் வெற்றி வாகை சூடியுள்ளார்.

aap gets only one seat in lok sabha elections

தனக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கேவல் சிங் சில்லோனை 1.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பக்வந்த் மான் தோற்கடித்துள்ளார்.

பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 8 தொகுதிகளும், பாஜகவிற்கு 2 தொகுதிகளும், சிரோமணி அகாலி தளம் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு தலா ஒரு இடங்களும் கிடைத்தன.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல்வேறு ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை அன்னா ஹசாரேவுன் இணைந்து நடத்தியவர் அர்விந்த் கேஜ்ரிவால். அவரை விட்டு பிரிந்து தனியாக அரசியல் கட்சி துவங்கி டெல்லி முதல்வராக பதவி வகித்து வருகிறார். கடந்த முறை மோடி பிரதமராவதற்கு ஒரு வகையில் அன்னா ஹசாரே- அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நடத்திய போராட்டங்களும் மறைமுக காரணமாக அமைந்தன.

யாரு... ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமா.. இவ்வளவு பக்குவமா பேசுறாப்ள..! யாரு... ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமா.. இவ்வளவு பக்குவமா பேசுறாப்ள..!

இந்த நிலையில், தற்போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவதற்கு விரும்பவில்லை. இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

English summary
Aam Admy Party has secured only one seat from Punjab in 17th lok sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X