டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி தேர்தலில் வாக்கு சதவீதம்.. தக்க வைத்தது ஆம் ஆத்மி.. தட்டி தூக்கிய பாஜக

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக சரிய மத அரசியலே காரணம்.. வெறுப்பு அரசியல் எடுபடவில்லை.. தமிழக ஆம் ஆத்மி அதிரடி - ஆடியோ

    டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி தனது வாக்கு வங்கியை வழக்கம் போல் தக்கவைத்துக்கொண்டுள்ளது. அதேநேரம் பாஜகவின் வாக்கு வங்கியும் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது அதிகரித்துள்ளது.

    டெல்லி சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

    AAP maintains 54% vote share of 2015, BJP improves vote share from 32% in 2015 to 39%

    இன்று சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பிற்பகல் நிலவப்படி, ஆம் ஆத்மி கட்சி 26 இடங்களில் முன்னிலையிலும், 37வெற்றி என 63 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 3 இடங்களில் முன்னிலை, 4 வெற்றி என 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை.

    டெல்லி தேர்தலில் வாக்கு சதவீதம் என்று பார்த்தால் கடந்த 2015 தேர்தலை ஒப்பிடும் போதும் ஆம் ஆத்மியின் வாக்கு சதவீதம் குறையவில்லை. வழக்கம் போல் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி 54 சதவீத வாக்குகளை தக்க வைத்துள்ளது. 2015ல் 54.3 சதவீதம் வாக்குகளை பெற்று மொத்தம் உள்ள 70ல் 67 தொகுதிகளை ஆம் ஆத்மி வென்று இருந்தது.

    மதம் எங்களை பிரிக்க முடியாது.. ஓங்கியடித்த ஓக்லா மக்கள்! ஆம் ஆத்மி வரலாற்று வெற்றி, நிலைகுலைந்த பாஜகமதம் எங்களை பிரிக்க முடியாது.. ஓங்கியடித்த ஓக்லா மக்கள்! ஆம் ஆத்மி வரலாற்று வெற்றி, நிலைகுலைந்த பாஜக

    அதே சமயம் மத்தியில் ஆளும் பாஜக கடந்த 2015 தேர்தலுடன் ஒப்பிடும் போது அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதுடன் வாக்கு சதவீதத்தையும் உயர்த்தி உள்ளது. 2015 தேர்தலில் 32.1 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் 39 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    English summary
    AAP maintains 54% vote share of 2015, BJP improves vote share from 32% in 2015 to 39%, but congress vote share down now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X