டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆம் ஆத்மி 68 தொகுதிகளில் வெல்லும்.. பாஜகவுக்கு மிக பலத்த அடி.. அதிரடி இந்தியா டுடே எக்ஸிட் போல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi Exit Poll Results| வலுவான தலைவராக உருவெடுக்கும் கெஜ்ரிவால்

    டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெறும் என்று இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.

    இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் முடிவுகளை பாருங்கள்: டெல்லியில் 59-68 இடங்களை வென்று, ஆம் ஆத்மி மீண்டும் டெல்லியில் ஆட்சியமைக்கும் கணிக்கப்பட்டுள்ளது. பாஜக 2 முதல் 11 இடங்களை வெல்லும் என்றும் காங்கிரஸ் தனது கணக்கைத் திறக்காது என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது பூஜ்யம்தான் காங்கிரசுக்கு.

    AAP to win 59-68 Seats in Delhi: India today- Axis My India

    டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தொகுதியான வடகிழக்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 7-9 இடங்களையும், பாஜக 1-3 இடங்களையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    புது டெல்லி மாவட்டத்தில், ஆம் ஆத்மி கட்சி 9-10 இடங்களையும், பாஜக 0-1, காங்கிரஸ் 0 இடங்களையும் பெறலாம். தெற்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு 9-10 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக இந்தியா டுடே வெளியிடும் எக்ஸிட் போல் முடிவுகள், சரியாக பொருந்திப்போயுள்ளன. கடந்த லோக்சபா தேர்தல், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளையும் இது சரியாகவே கணித்தது. அந்த வகையில் பார்த்தால், டெல்லியில் ஆம் ஆத்மி அலை வீசுகிறது என்று சொல்ல முடியும்.

    டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி.. எக்ஸிட் போலை பார்த்து துள்ளி குதிக்கும் திமுக.. செம காரணம் இருக்கு!டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி.. எக்ஸிட் போலை பார்த்து துள்ளி குதிக்கும் திமுக.. செம காரணம் இருக்கு!

    கடந்த முறை, ஆம் ஆத்மி 67 தொகுதிகளை வென்றது. வெறும் 3 தொகுதிகள்தான் பாஜகவுக்கு கிடைத்தது. இந்தியா டுடே கருத்துக் கணிப்பை பார்த்தால், மீண்டும், வரலாறு திரும்புவதாகவே தெரிகிறது.

    English summary
    AAP to win 59-68 Seats in Delhi, says India today- Axis My India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X