டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடேங்கப்பா.. ஆம் ஆத்மிக்கு 48 முதல் 61 இடங்கள்... பாஜக ஆதரவு ரிபப்ளிக் டிவியே சொல்லுதே!

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi exit Poll results | டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி... கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு - வீடியோ

    டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 48 முதல் 61 இடங்களைக் கைப்பற்றும் என்று பாஜக ஆதரவு தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவியின் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

    டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் முடிவுகள் வெளியிடப்பட்டன.

    AAP will get 48 to 61 seats in Delhi: Republic TV - Jan Ki Bac

    அனைத்து கருத்து கணிப்பு முடிவுகளிலும் டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மிதான் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. பாஜகவுக்கு முழுமையான ஆதரவு தெரிவிக்கும் அர்னாப் கோஸ்வாமியை ஆசிரியராக கொண்ட ரிபப்ளிக் டிவியின் எக்ஸிட் போல் முடிவுகள்தான் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

    டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி... பாஜகவின் கனவு டமால்- காங். அவுட்... எக்ஸிட் போல் முடிவுகள் டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி... பாஜகவின் கனவு டமால்- காங். அவுட்... எக்ஸிட் போல் முடிவுகள்

    ரிபப்ளிக் டிவி- ஜன் கி பாத் எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 70 தொகுதிகளில் 48 முதல் 61 இடங்கள் கிடைக்கும் என்கிறது. அதே நேரத்தில் பாஜகவுக்கு 9 முதல் 21 இடங்கள்தான் கிடைக்கும் என அதிரடியாக கூறுகிறது ரிபப்ளிக் டிவி- ஜன் கி பாத் எக்ஸிட் போல் முடிவுகள்.

    காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைக்கும் என பிற கருத்து கணிப்புகளைப் போலவே ரிபப்ளிக் டிவி- ஜன் கி பாத் எக்ஸிட் போல் முடிவும் தெரிவிக்கிறது.

    English summary
    According to the Republic TV - Jan Ki Baat exit poll, AAP will get 48 to 61 seats in Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X