டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டுக்காக சேவையாற்ற மீண்டும் வருகிறார் அபிநந்தன்… மருத்துவ விடுப்பு முடிய உள்ளதாக தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் மருத்துவ விடுப்பு முடிந்து விரைவில் பணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது மருத்துவ விடுப்பில் உள்ள போர் விமானி அபிநந்தன், முழு உடல் தகுதியுடன், தான் விரும்பிய போது மீண்டும் பணியில் சேர்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Abhinandan can resume his operations as a fighter pilot will be taken soon

கடந்த மாதம் 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 35 வயதான விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் எல்லையில் துரதிஷ்டவசமாக பாராசூட்டில் இறங்கினார்.

என்னாது நான் தலைமறைவாகிவிட்டேனா.. சொந்த கிராமத்துலதாங்க இருக்கேன்- பார் நாகராஜ் என்னாது நான் தலைமறைவாகிவிட்டேனா.. சொந்த கிராமத்துலதாங்க இருக்கேன்- பார் நாகராஜ்

பாகிஸ்தான் மேஜரின் கேள்விக்கு வீரமாகவும், விவேகமாகவும் பதிலளித்தார். விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிய சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இதனை அடுத்து இந்தியா மற்றும் மற்ற உலக நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து விமானி அபிநந்தனை விடுவிக்க அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மார்ச் 1 ம் தேதி சாலை மார்க்கமாக அழைத்துவரப்பட்ட அபிநந்தனை வரவேற்க வாகா - அட்டாரி எல்லையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். மேள தாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து ஆரவாரமாக அபிநந்தனை தாயகம் வரவேற்றனர்.

இந்த நிலையில், அபிநந்தன் விமானியாக தொடர்வாரா அல்லது விமானப் படையில் வேறேதும் நடை முறைகள் உள்ளனவா என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஆனால், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அபிநந்தன், தற்போது மருத்துவ விடுப்பில் உள்ள நிலையில், முழு உடல் தகுதியுடன் விரைவில் பணிக்கு திரும்பி, நாட்டுக்காக மீண்டும் சேவை ஆற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Wing Commander Abhinandan can resume his operations as a fighter pilot will be taken by a medical board in near future, sources said
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X