டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏபிபி சர்வே: லோக் சபா தேர்தலில் பாஜகவிற்குத்தான் அமோக வெற்றி.. எத்தனை இடங்கள் தெரியுமா? #DeshKaMood

2019ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடித்து வெற்றிபெறும் என்று ஏபிபி சேனல் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    எதிர் கட்சிகளின் கூட்டணி அமைத்தால் பாஜகவிற்கு பின்னடைவு - ஏபிபி சர்வே தகவல்

    டெல்லி: 201 ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடித்து வெற்றிபெறும் என்று ஏபிபி சேனல் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

    ஏபிபி ஹிந்தி டிவி சேனலின் 'தேசத்தின் மனநிலை' சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளது. அடுத்த வருடம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. இந்தியாவில் நடத்தப்பட்ட பெரிய கருத்து கணிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

    ABP Desh Mood Survey: NDA to win 300, PA to get 116 seats if Lok Sabha elections were to be held today

    அதன்படி இந்த கருத்து கணிப்பு மாநில வாரிய எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வடமாநிலங்களுக்கு இதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் கூட்டணியை பொறுத்து தேர்தல் முடிவுகள் மாறும் என்று கோரியுள்ளது.

    மேற்கு வங்கத்தில் அதிக லோக் சபா இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் பிடிக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதேபோல் தென்னிந்தியாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு 34 தொகுதிகள் கிடைக்கும். பாஜக கூட்டணிக்கு 20 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பிற கட்சிகள் 75 தொகுதிகளை வெல்லும் என்றுள்ளது.

    ஆனால் மொத்தமாக இந்தியா முழுக்க இப்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் பாஜக அதிக இடங்களை பிடித்து வெற்றிபெறும் என்று ஏபிபி சேனல் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி மொத்தம் உள்ள 543 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300 தொகுதிகளை வெல்லும் என்றுள்ளது. அதாவது ஏபிபி சர்வேயின் படி பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 116 தொகுதிகளை வெல்லும் என்று சர்வே கூறுகிறது. மேலும் மூன்றாவது அணி அமைந்தால் அந்த அணி 127 தொகுதிகளை வெல்லும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

    English summary
    543 SEATS - Narendra Modi-led NDA government projected to win 300 seats if Lok Sabha elections were to be held today. UPA likely to get 116 seats. Other parties may fetch 127 seats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X