டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காது.. அடித்து சொல்லும் ஏபிபி எக்ஸிட் போல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit polls 2019 | மீண்டும் பாஜக! ஆனால் தமிழகத்தில் திமுக

    டெல்லி: லோக்சபா தேர்தல் திருவிழா இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் எக்ஸிட் போல், கருத்துக் கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

    பெரும்பாலான முன்னணி தொலைக்காட்சி சேனல்கள் தங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதில், ஏறத்தாழ அனைத்துமே, தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை பிடித்து ஆட்சியமைக்கும் என்றுதான் உள்ளது.

    ஆனால், ஏபிபி நியூஸ் சேனல் கருத்துக் கணிப்பு மட்டும் வித்தியாசமாக உள்ளதை பார்க்க முடிகிறது. இது எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு நம்பிக்கையளிப்பதாகவும் உள்ளது.

    தேமுதிகவின் முதல் எம்.பி. என்ற பெருமையைப் பெறுவாரா விஜயகாந்த் மச்சான் சுதீஷ்? தேமுதிகவின் முதல் எம்.பி. என்ற பெருமையைப் பெறுவாரா விஜயகாந்த் மச்சான் சுதீஷ்?

    பெரும்பான்மை கிடைக்காது

    பெரும்பான்மை கிடைக்காது

    ஏபிபி நியூஸ் சேனல் கருத்துக் கணிப்புப்படி, தேசிய ஜனநாயக கூட்டணியால் பெரும்பான்மைக்கு தேவைப்படும் தொகுதிகளை வெல்ல முடியாது. தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில், தே.ஜ.க கூட்டணி வெறும் 267 தொகுதிகளைத்தான் வெல்ல முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பிற கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளை தாண்டிவிடும் என்றுதான் கூறின.

    தனிப்பெரும் கூட்டணி

    தனிப்பெரும் கூட்டணி

    ஏபிபி நியூஸ் கருத்துக் கணிப்புப்படி, தே.ஜ.க கூட்டணியில், பாஜக மட்டும் 218 தொகுதிகளைத்தான் வெல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது. ஆக மொத்தம், பெரும்பான்மை பலத்திற்கு, 5 தொகுதிகளை தே.ஜ.க கூட்டணி குறைவாகவே பெறப்போகிறது என்பதுதான் இக் கருத்து கணிப்பு சொல்லும் சாராம்சம். ஆனாலும், பாஜக கூட்டணிதான் தனிப்பெரும் கூட்டணியாக உருவெடுக்கும் என்பதை இந்த எக்ஸிட் போலும் மறுக்கவில்லை.

    காங்கிரஸ் கூட்டணிக்கு கம்மிதான்

    காங்கிரஸ் கூட்டணிக்கு கம்மிதான்

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 127 தொகுதிகளைத்தான் வெல்லும் என்று கணித்துள்ளது ஏபிபி நியூஸ். பிறர், அதாவது மகாகட்பந்தன் போன்ற கூட்டணியில் உள்ள கட்சிகள், 148 தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு இருக்கிறதாம்.

    கூட்டணி ஆட்சி

    ஒருவேளை பெரும்பான்மைக்கு இன்னும் கொஞ்சம் இடங்களை பாஜக கூட்டணி குறைவாக பெற்றால் அப்போது காங்கிரஸ்- பிற கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதை இந்த கருத்துக் கணிப்பு எடுத்துக் காட்டுகிறது.

    English summary
    ABP ExitPoll 2019 says NDA to win 267 seats (BJP 218), falls five short of majority UPA may get 127 seats Others - 148 seats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X