டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2019 லோக்சபா தேர்தல்.. உ.பியை வெல்லப் போவது யார்.. பரபரப்பான ஏபிபி சர்வே #DeshKaMood

Google Oneindia Tamil News

Recommended Video

    எதிர் கட்சிகளின் கூட்டணி அமைத்தால் பாஜகவிற்கு பின்னடைவு - ஏபிபி சர்வே தகவல்

    டெல்லி : உத்தர பிரதேச மாநிலத்தில் அமையும் வலுவான கூட்டணி லோக்சபா தேர்தலில் 44 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக ஏபிபி ஹிந்தி டிவி சேனலின் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

    2019 லோக்சபா தேர்தலில் ஆட்சியை கைபற்றப்போவது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் என்பதோடு எப்படி பிராந்திய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து வெற்றியை உரித்தாக்கும் என்ற கேள்வி உள்ளது. மற்றொருபுறம் 2014 தேர்தலுக்கு பின்னர் பாஜகவின் பலம் அதிகரித்துள்ள நிலையில் 2019 தேர்தல் சவாலானதாக இருக்காது என்று பாஜக தொண்டர்கள் கருதி வருகின்றனர்.

    ABP Hindi survey results on 2019 loksabha elections says grand alliance in UP will won 44 seats

    இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும்,கட்சிகளின் பலம் என்ன என்பனவை குறித்து ஏபிபி ஹிந்தி டிவி சேனல் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. 'தேசத்தின் மனநிலை' என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி அமைந்தால் 44 இடங்கள் கிடைக்கும் என்று சர்வே முடிவு கூறுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 31 தொகுதிகளையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 5 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்பு இருப்பதாக ஏபிபி சர்வே தெரிவிக்கிறது.

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரியை லோக் தளம் கட்சிகள் மகா கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டால் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்றும் ஏபிபி சர்வே எடுத்துள்ளது. இதன்படி பாஜக கூட்டணிக்கு 70 இடங்களும், காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு தலா 4 தொகுதிகள் கிடைக்கக் கூடும் என்று சர்வே சொல்கிறது.

    English summary
    ABP Hindi survey results on 2019 loksabha elections says grand alliance in UP will won 44 seats and NDA will score 31, UPA will win 5seats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X