டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரபேலால் மோடியின் புகழுக்கு பாதிப்பு ஏற்பட்டதா? ஏபிபி - சி வோட்டர் சுவாரசிய கணிப்பு!

ரபேல் ஊழல் குற்றச்சாட்டால் பிரதமர் மோடியின் புகழுக்கு இழுக்கு வந்து இருக்கிறதா என்று ஏபிபி - சி வோட்டர் சர்வே நடத்தி இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: ரபேல் ஊழல் குற்றச்சாட்டால் பிரதமர் மோடியின் புகழுக்கு இழுக்கு வந்து இருக்கிறதா என்று ஏபிபி - சி வோட்டர் சர்வே நடத்தி இருக்கிறது.

லோக் சபா தேர்தலுகான தொடர்பாக வரிசையாக நிறைய தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது. யார் ஆட்சியை பிடிப்பார், எங்கு யாருக்கு வெற்றி வாய்ப்பு என்று நிறைய கணிப்புகள் வெளியாகி வருகிறது.

ABP News-CVoter Survey: Does Modis fame affected by Rafale deal?

இந்த நிலையில் இது தொடர்பாக ஏபிபி - சி வோட்டர் சர்வே நடத்தி இருக்கிறது. அதில் ரபேல் விவகாரம் தொடர்பாகவும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ரபேல் விவகாரம் பெரிய பிரச்சனையாகி இருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் தொடர்பாக நிறைய குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். பிரதமர் மோடி இது அவர் நேரடியாக குற்றச்சாட்டு வைத்து வருகிறார். இந்த நிலையில் ரபேல் ஊழல் குற்றச்சாட்டால் பிரதமர் மோடியின் புகழுக்கு இழுக்கு வந்து இருக்கிறதா என்று ஏபிபி - சி வோட்டர் சர்வே நடத்தி இருக்கிறது.

அதில், ஆமாம் அதிகமாக மோடியின் புகழ் கெட்டு இருக்கிறது என்று 24.8% பேர் பதில் அளித்துள்ளனர். கொஞ்சமாக கேட்டு இருக்கிறது என்று 24.8% பேர் பதில் அளித்துள்ளனர்.

மோடியின் புகழுக்கு எந்த பங்கமும் இல்லை என்று 44.9 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். கருத்து இல்லை என்று 8.6 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் தென்னிந்தியா மற்றும் மேற்கு இந்தியாவில் மோடியின் புகழ் இதனால் 52 சதவிகிததிற்கும் அதிகமாக மோசமாகி இருக்கிறது. ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் மோடியின் புகழ் இதனால் பாதிக்கவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.

English summary
ABP News-CVoter Survey: Modi's fame is not affected by Rafale deal in North and East India, But falls a lot in West and South India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X