டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ம.பியில் மீண்டும் பாஜக.. ஹரியானாவிலும் தாமரைதான்.. ஏபிபி சர்வேயில் காங்கிரசுக்கு அதிர்ச்சி!

லோக் சபா தேர்தலில் மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவே சிறப்பாக வெற்றிபெறும் என்று ஏபிபி - சி வோட்டர் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: லோக் சபா தேர்தலில் மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவே சிறப்பாக வெற்றிபெறும் என்று ஏபிபி - சி வோட்டர் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக் சபா தேர்தல் கருத்து கணிப்புகள் வரிசையாக தற்போது வெளியாகி வருகிறது.தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் பல இப்போதே வெளி வர தொடங்கி இருக்கிறது.

தற்போது செய்தி நிறுவனமான ஏபிபி செய்தி சேனலும், சி வோட்டர் செய்தி சேனலும் சேர்ந்து தேர்தல் குறித்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. ஒடிஷா, மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் லோக் சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒடிஷா

ஒடிஷா

ஒடிஷாவில் மொத்த இடங்கள் 21. இதில் பிஜூ ஜனதாதளத்திற்கு 9 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு 12 சீட் கிடைக்கும். பிஜூ ஜனதாதளம் முதல்முறையாக இங்கு கொஞ்சம் பின்னடைவை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும். அங்கு பாஜக ஆட்சியை இழந்தாலும் லோக் சபா தேர்தலில் சிறப்பான வெற்றியை பெற உள்ளது. மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் 23ஐ வெல்லும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 6 தொகுதிகளே கிடைக்கும்.

ஹரியானா நிலை

ஹரியானா நிலை

ஹரியானா மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 7 இடங்கள் கிடைக்கும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 3 இடங்களே கிடைக்கும். இந்த மாநிலம் காங்கிரஸ் சரிவிற்கு முக்கிய காரணமாக அமையும்.

என்ன தெரிகிறது

என்ன தெரிகிறது

தேர்தல் கணிப்புகள் படி பாஜக முன்பைவிட இந்த முறை நிறைய இடங்களை இழக்க உள்ளது. சுமார் 90இடங்களையோ பாஜ கூட்டணி இழக்கும் என்று கூறப்படுகிறது.

English summary
ABPNews-CVoter Survey: BJP will hit hard in MP, Odisha and Haryana, UPA will be drawn back from the pitch majority.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X