டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த சிவப்பு சட்டை.. ஜேஎன்யூ மாணவர்களை தாக்கிய ஏபிவிபி.. கையும் களவுமாக சிக்கிய நபர்.. பகீர் உண்மை!

கடந்த வாரம் ஜேஎன்யூவில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏபிவிபி மாணவர்கள் ஈடுப்பட்டது உறுதியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ABVP students in JNU violence | Video goes viral after fact check

    டெல்லி: கடந்த வாரம் ஜேஎன்யூவில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏபிவிபி மாணவர்கள் ஈடுப்பட்டது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக பிரபல உண்மை கண்டறியும் நிறுவனமான அல்ட் நியூஸ் நிறுவனம் ஆய்வு செய்து ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் மிக முக்கியமான கல்வி நிறுவனமாக ஜேஎன்யூ எனப்படும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மதிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஜேஎன்யூ கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது . கடந்த வாரம் டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.

    நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தையே நிகழ்த்தினார்கள். இதில் மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களையும் சரமாரியாக தாக்கப்பட்டனர்.

    ஈரான் விமான விபத்து சந்தேகம் தருகிறது.. களமிறங்கினார் ஜஸ்டின் ட்ரூடோ.. விசாரணை செய்யும் கனடா! ஈரான் விமான விபத்து சந்தேகம் தருகிறது.. களமிறங்கினார் ஜஸ்டின் ட்ரூடோ.. விசாரணை செய்யும் கனடா!

    மாணவர் அமைப்பு

    மாணவர் அமைப்பு

    இந்த தாக்குதலுக்கு எதிராக நாடு முழுக்க மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த தாக்குதலை ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபிதான் நடத்தியது என்று புகார் உள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்த ஏபிவிபி மாணவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    கலவரம் எப்படி

    கலவரம் எப்படி

    இந்த நிலையில் பல்கலையில் நடந்த கலவரத்திற்கு நாங்கள் காரணம் இல்லை, இடதுசாரி மாணவர்கள்தான் காரணம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி தெரிவித்து இருந்தது. இதற்காக அந்த அமைப்பு ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருந்தது. ஏபிவிபு அமைப்பினரை இடதுசாரி மாணவர்கள் தாக்கும் விதமாக அந்த வீடியோ இருந்தது.

    வீடியோ எப்படி

    வீடியோ எப்படி

    இந்த நிலையில் இந்த வீடியோவில் இருப்பது இடதுசாரி மாணவர்கள் கிடையாது, ஏபிவிபி மாணவர்கள்தான் இந்த தாக்குதலை நிகழ்த்தியது என்பது புலனாகி உள்ளது. ஜேஎன்யூ துணை வேந்தர் ஜெகதீஷ் குமார் வெளியிட்ட வீடியோதான் இப்படி சர்ச்சையில் செய்கிறது.

    எல்லாம் பொய்

    அதில் பல்கலையில் குளிர்கால அட்மிஷனை தடுக்கும் பொருட்டு மாணவர்கள் போராட்டம் செய்கிறார்கள். இந்த கலவரத்திற்கு காரணம் அதுதான் என்று ஜெகதீஷ் குமார் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த வீடியோவில் மாணவர்களை தாக்குவது ஏபிவிபி உறுப்பினர்கள் என்று உறுதியாகி உள்ளது. பொய்யான செய்திகளை கண்டறியும் தலமான ஏபிவிபி இதை கண்டுபிடித்துள்ளது .

    யார் இவர்

    இந்த வீடியோவில் சிவப்பு நிற உடை அணிந்து இருக்கும் நபர் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த சர்வேந்தர் குமார் என்பவர் அவர். இவர் அங்கு பிஎச்டி படிக்கும் மாணவர். இவர் ஏபிவிபி அமைப்பில் இருக்கிறார். இவர்தான் அங்கு மாணவர்களை தாக்கி உள்ளார். இவரின் அடையாளத்தை ஏபிவிபி உறுப்பினர்கள் சிலரும், மற்ற மாணவ அமைப்பை சேர்ந்தவரும் உறுதி செய்துள்ளனர்.

    ஆனால் மறுப்பு

    ஆனால் மறுப்பு

    ஆனால் இதை ஏபிவிபி மறுத்துள்ளது. நாங்கள் யாரையும் தாக்கவில்லை. எங்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நாங்கள் இதை செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

    பெண்

    முன்னதாக இந்த தாக்குதலின் போது சில பெண்கள் கையில் கத்தியும் வைத்துக் கொண்டு மாணவர்களை தாக்கி உள்ளனர்.அதில் சிவப்பு கட்டம் போட்ட சட்டை அணிந்திருக்கும் இந்த பெண், கையில் கத்தி வைத்துக்கொண்டு சக மாணவர்களை மிரட்டி உள்ளார். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஆதாரங்களும் வெளியாகி உள்ளது.

    English summary
    ABVP attacked students in Jawaharlal Nehru University: Attacker Video goes viral after fact check.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X