டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புவர் பர்ஃபாமென்ஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது பாய்கிறது நடவடிக்கை.. உள்துறை அமைச்சகம் அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் செயல்திறன் குறைந்து காணப்படும் சுமார் 1,200 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளின் செயல்திறன் வெளிப்படைத்தன்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். இதற்காக அதிகாரிகளின் செயல்திறன் குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

Action flows into the IPS officers who Performed poor.. Interior Ministry plan

நாடு முழுவதும் சுமார் 3,972 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியாற்றி வரும் நிலையில், செயல்பாடு குறைந்த சுமார் 1,181 ஐ.பி.எஸ் அதிகாரிகள் குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது.

சார் நான் அடுத்தவங்க காசில் டீ கூட குடிக்க மாட்டேன்.. ஒரு சபாஷ் ஆட்டோ டிரைவர்! சார் நான் அடுத்தவங்க காசில் டீ கூட குடிக்க மாட்டேன்.. ஒரு சபாஷ் ஆட்டோ டிரைவர்!

உயிரிழப்பு மற்றும் ஓய்வுக்கால பணிகள் சட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இச்சட்டத்தின்படி மக்களின் நலன்கருதி, மாநில அரசிடம் ஆலோசனை மேற்கொண்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மூன்று மாத கால அவகாசம் கொடுத்து கட்டாய ஓய்வு பெற அறிவுறுத்த முடியும்

எனவே செயல்திறன் குறைந்ததாக கணக்கெடுக்கப்பட்ட 1,181 ஐ.பி.எஸ் அதிகாரிகளில், 10 பேரை முன்கூட்டியே கட்டாய ஓய்வுபெற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதான மத்திய அரசின் இந்த ஆய்வு தொடர்ந்து வரும் நிலையில், நடவடிக்கை மேற்கொள்ள இருக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை மேலும் உயரும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

English summary
There are reports that the Ministry of Home Affairs has decided to take action against 1,200 IPS officers who have failed to perform across the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X